Home | 12 ஆம் வகுப்பு | 12வது தாவரவியல் | பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள்

தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம் - தாவரவியல் செய்முறைகள் - பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள் | 12th Botany : Practicals

12 வது தாவரவியல் : செய்முறைகள்

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள்

தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம் - தாவரவியல் செய்முறைகள்

தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம்


சோதனை எண் 24: பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள்

1. கோதுமை


தாவரவியல் பெயர்: டிரிட்டிக்கம் எஸ்டிவம்


யன்படும் பகுதி:  முழுத் தானியம்


பயன்கள்


1. கோதுமை மாவு ரொட்டி மற்றும் அடுமனைப் பொருட்கள் தயாரிக்க உகந்தது


2. முளைகட்டிய கோதுமை மதுபானம், ஊட்டச்சத்து பானங்கள் போன்றவை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப்பொருளாகும்.

 


2. மிளகு


தாவரவியல் பெயர்: பைப்பர் நைக்ரம்


யன்படும் பகுதி: விதைகள்


பயன்கள்


1. நறுமணத் தூண்டியாக, உமிழ்நீர், வயிற்றுச் சுரப்புகளை அதிகப்படுத்தப் பயன்படுகிறது.


2. மருந்துகளின் உயிர்ப்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது.

 

3. பருத்தி


தாவரவியல் பெயர்: காஸிபியம் பார்படென்ஸ


பயன்படும் பகுதி:  விதையுறை நார்கள்


பயன்கள்


1. பலதரப்பட்ட துணிகள், உள்ளாடைகள், பொம்மைகள் தயாரிப்பிலும், மருத்துவமனைகளிலும் பயன்படுகிறது.


2. தலையணைகள், மெத்தைகளை நிரப்பவும் பயன்படுகிறது

 

4. கீழாநெல்லி


தாவரவியல் பெயர்: பில்லாந்தஸ் அமாரஸ்


பயன்படும் பகுதி:  தண்டுப்பகுதி முழுவதும்


பயன்கள்


இத்தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாறு மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது


 

5. பச்சைப்பயறு


தாவரவியல் பெயர்: விக்னா ரேடியேட்டா


பயன்படும் பகுதி: விதைகள்


பயன்கள்


1. இதை வறுத்தோ, சமைத்தோ, முளைக்க வைதோ பயன்படுத்தலாம்.


2. வறுத்துத் தோல் நீக்கப்பட்ட, உடைத்த அல்லது முழுப் பயறு பிரபலமான சிற்றுண்டியாகப் பயன்படுத்தப்படுகிறது

 

6. வாழை


தாவரவியல் பெயர்: மியூசா X பாரடிசியாகா


பயன்படும் பகுதி: பழங்கள்


பயன்கள்


1. வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இன்றியமையா வைட்டமின்கள் செறிந்துள்ளன. இது நேரடியாகவோ அல்லது சமைத்தோ உண்ண ப்படுகிறது.

2. வாழைப்பழம் பதப்படுத்தப்பட்டு, மாவாக்கி, நொதிக்கவைக்கப்பட்ட பானங்களான வாழைப்பழச்சாறு, பீர், வினிகர், பழரசம் (vine), போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது

12 வது தாவரவியல் : செய்முறைகள்