அலகு 2
தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்

கற்றல் நோக்கங்கள்
❖ இந்தியாவில் காணப்படும் தேர்தல் முறையைப் பற்றி அறிதல்
❖ இந்தியாவின் பல்வேறு வகையான தேர்தல்கள் பற்றி அறிதல்
❖ அரசியல் கட்சிகளின் பொருளைப் புரிதல்
❖ தேசிய கட்சி மற்றும் மாநில கட்சிகளின் நடைமுறைகளை அறிதல்
❖ இந்தியாவில் உள்ள அழுத்தக் குழுக்கள் பற்றி புரிதல்
அறிமுகம்
தேர்தல் என்பது தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையாகும்.