Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | சுற்றுச்சூழல் இடர்பாடுகள்

விலங்கியல் - சுற்றுச்சூழல் இடர்பாடுகள் | 12th Zoology : Chapter 13 : Environmental Issues

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 13 : சுற்றுச்சூழல் இடர்பாடுகள்

சுற்றுச்சூழல் இடர்பாடுகள்

அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமானதாகும்.

சுற்றுச்சூழல் இடர்பாடுகள்


பாடம்  13


சுற்றுச்சூழலே என்னுடைய முதன்மையான ஆசிரியர்

- மசனபுஃபுகுயோகா


பாட உள்ளடக்கம்

13.1 மாசுபாடு 

13.2 காற்று மாசுபாடு 

13.3 நீர் மாசுபாடு 

13.4 ஒலி மாசுபாடு 

13.5 வேளாண் வேதிப்பொருட்கள் 

13.6 உயிரிய உருப்பெருக்கம் 

13.7 மிகை உணவூட்டம் 

13.8 இயற்கை வேளாண்மை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துதல் 

13.9 திடக்கழிவு மேலாண்மை 

13.10 சூழல் சுகாதாரக் கழிவறைகள் 


கற்றலின் நோக்கங்கள்

* நம்முடைய சுற்றுச்சூழல் மற்றும் அதனுடைய முக்கியத்துவம் பற்றிய அறிவை பெறுதல். 

* காலநிலை மற்றும் சூழ்நிலை மண்டலத்தின் மீது மனிதனின் செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பின் விளைவுகளை அறிந்து கொள்ளல்.

* மாசுபாடுகளை மட்டுப்படுத்த, சூழியலுக்கு உகந்த செயல்பாடுகளை அறிந்து கொள்ளல். 

* சுற்றுச்சூழல் சிக்கல்களுக்கான தீர்வுகளை தெளிவாகப் புரிந்து கொள்ளுதல். 

* சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களுடைய பங்களிப்பின் அவசியத்தை உணர்தல். 

* தூய்மையான சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளல்.


அமைதியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமானதாகும். ஆனால் நம்முடைய அலட்சியத்தால் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மாசடைகின்றது. நம்முடைய புவி காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, ஒலி மாசுபாடு, புவி வெப்பமாதல், அமிலமழை, உயிரிய உருப்பெருக்கம், மிகை உணவூட்டம், காடுகளை அழித்தல், கழிவுகள் வெளியேற்றம், ஓசோன் படலச் சிதைவு , காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்களை தற்சமயம் எதிர்கொள்கிறது. கடந்த சில பத்தாண்டுகளுக்கும் மேலாக நம்முடைய புவியின் மிகை பயன்பாடு மற்றும் நம்முடைய சுற்றுச்சூழலின் சிதைவு ஆகியவை அபாய அளவின் உச்சத்தை தொட்டுள்ளது. நம்முடைய செயல்கள் இந்த கோளை பாதுகாப்பதற்கு ஆதரவாக இல்லாததால், திடீர் வெள்ளப் பெருக்கு, ஆழிப்பேரலை மற்றும் புயல்கள் போன்ற இயற்கை பேரழிவுகளை அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது.

சுற்றுச்சூழல் சிக்கல்களை சார்ந்திருப்பவர் அல்லது சாராதார் என்ற பாகுபாடின்றி, ஒவ்வொரு தனி நபரும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.


12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 13 : சுற்றுச்சூழல் இடர்பாடுகள்