Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | ஆக்சாலிக் அமிலத்தின் நிறையறிதல்

பருமனறி பகுப்பாய்வு | வேதியியல் செய்முறை ஆய்வக பரிசோதனை - ஆக்சாலிக் அமிலத்தின் நிறையறிதல் | 12th Chemistry : Practicals

வேதியியல் : செய்முறை

ஆக்சாலிக் அமிலத்தின் நிறையறிதல்

பருமனறி பகுப்பாய்வின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள செறிவறியா ஆக்சாலிக் அமிலக் கரைசலில் 1250mLல் கரைந்துள்ள படிக ஆக்சாலிக் அமிலத்தின் நிறையினைத் தீர்மானித்தல். இதற்கென, 0.1010N திறனுடைய திட்ட HC1 கரைசல் மற்றும் சோடியம் ஹைடிராக்சைடு இணைப்புக் கரைசல் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.

ஆக்சாலிக் அமிலத்தின் நிறையறிதல் 


நோக்கம்:

பருமனறி பகுப்பாய்வின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள செறிவறியா ஆக்சாலிக் அமிலக் கரைசலில் 1250mLல் கரைந்துள்ள படிக ஆக்சாலிக் அமிலத்தின் நிறையினைத் தீர்மானித்தல். இதற்கென, 0.1010N திறனுடைய திட்ட HC1 கரைசல் மற்றும் சோடியம் ஹைடிராக்சைடு இணைப்புக் கரைசல் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.


தத்துவம்

தரம்பார்த்தல் வினைகள் (நடுநிலையாக்கல் வினைகள்

NaOH + HC1 → NaC1 + H2

2NaOH + (COOH) 2 → (COONa) 2 +2H2O

            Oxalic acid       Sodium oxalate


சுருக்கமான செய்முறை :



செய்முறை : 

தரம் பார்த்தல் - II 

NaOH இணைப்புக் கரைசல் VS HC1 திட்ட க்கரைசல்

பியூரெட்டை நீரினால் நன்கு கழுவ வேண்டும். பின்னர் தரம் பார்த்தலுக்கென கொடுக்கப்பட்டுள்ள HC1 திட்டக் கரைசலில் சிறிதளவு, பியூ ரெட்டில் எடுத்துக் கொண்டு அக்கரைசல் பியூரெட் முழுமையும் படுமாறு சுழற்றிக் கழுவுதல் வேண்டும். இதன் பிறகு, கொடுக்கப்பட்டுள்ள HC1 கரைசலைக் கொண்டு பியூரெட்டில் பூஜ்ஜியக் குறியீட்டு அளவு வரை நிரப்புக. மிகச்சரியாக 20mL NaOH இணைப்புக் கரைசலை பிப்பெட்டைக் கொண்டு உறிஞ்சி எடுத்து நன்கு கழுவப்பட்ட கூம்புக் குடுவையில் இடுக. மேலும் இதனுடன் இரு துளிகள் பினாஃப்தலின் நிறங்காட்டியினைச் சேர்க்க. இக்கரைசல் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும். இக்கரைசலை பியூரெட்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட HC1 கரைசலுடன் தரம் பார்க்க வினை நிறைவடையும் நிலையில் கரைசல் அமிலத்தன்மை பெறுவதால் வெளிறிய இளஞ்சிவப்பு நிறம் மறையும். இதுவே முடிவு நிலையாகும். இந்நிலையில் பியூரெட் அளவீட்டினை அட்டவணையில் குறித்து கொள்க. ஒத்த தரம் பார்த்தல் அளவீடுகளைப் பெறும் வரையில் தரம் பார்த்தலை மீளவும் நிகழ்த்தவும்.

தரம் பார்த்தல் - II   

NaOH இணைப்புக் கரைசல் VS திட்ட HC1 கரைசல்



கணக்கிடுதல்  

NaOH இணைப்புக் கரைசலின் கனஅளவு (V1) = ----- 20-----mL 

NaOH இணைப்புக் கரைசலின் திறன் (N1) = ---------------N

HC1 திட்ட கரைசலின் கனஅளவு (V2) =--------------mL 

HC1 திட்ட கரைசலின் திறன்(N2) = 0.1010 N 

பருமனறி பகுப்பாய்வுத் தத்துவத்தின்படி, V1 × N1  = V2 × N2

N1  = V2 × N2 / V1


NaOH இணைப்புக் கரைசலின் திறன் =

தரம் பார்த்தல்- II

NaOH இணைப்புக் கரைசல் VS திறனறியா ஆக்சாலிக் அமிலக் கரைசல்

பியூரெட்டை நீரினால் நன்கு கழுவ வேண்டும். பின்னர் தரம் பார்த்தலுக்கு என கொடுக்கப்பட்டுள்ள திறனறியா ஆக்சாலிக் அமிலம் கரைசலில் சிறிதளவு பியூரெட்டில் எடுத்துக் கொண்டு அக்கரைசல் பியூரெட் முழுமையும் படுமாறு சுழற்றிக் கழுவுதல் வேண்டும். இதன் பிறகு, கொடுக்கப்பட்டுள்ள ஆக்சாலிக் அமிலம் கரைசலைக் கொண்டு பியூரெட்டில் பூஜ்ஜியக் குறியீட்டு அளவு வரை நிரப்புக. மிகச்சரியாக 20mL இணைப்புக் கரைசலைக் (NaOH) பிப்பெட்டைக் கொண்டு உறிஞ்சி எடுத்து நன்கு கழுவப்பட்ட கூம்புக் குடுவையில் இடுக. மேலும் இதனுடன் இரு துளிகள் பினாஃப்தலின் சேர்க்க கரைசல் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும். இக்கரைசலை பியூரெட்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட திறனறியா ஆக்சாலிக் அமிலம் கரைசலுடன் தரம் பார்க்க. வினைமுடிவடையும் நிலையில் கரைசல் அமிலத்தன்மை பெறுவதால் பினாஃப்தாலின் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து நிறமற்றதாக மாறும். இதுவே முடிவு நிலையாகும். இந்நிலையில் பியூ ரெட் அளவீட்டினை அட்டவணையில் குறித்துக் கொள்க. ஒத்த தரம் பார்த்தல் அளவீடுகளை பெறும் வரையில் தரம் பார்த்தலை மீளவும் நிகழ்த்தவும்.

தரம் பார்த்தல்- II

NaOH இணைப்புக் கரைசல் VS திறனறியா ஆக்சாலிக் அமிலக் கரைசல்



கணக்கிடுதல்   

திறனறியா ஆக்சாலிக் அமிலக் கரைசலின் கனஅளவு (V1) =-------mL  

திறனறியா ஆக்சாலிக் அமிலக் கரைசலின் திறன் (N1) = ---------N 

NaOH இணைப்புக் கரைசலின் கன அளவு (V2) = ------ 20 –-------------mL 

NaOH இணைப்புக் கரைசலின் திறன் (N2) = -----------------N

பருமனறி பகுப்பாய்வு தத்துவத்தின்படி, V1 × N1 = V2 × N2

                                       N1 = V2 × N2 / V1

திறனறியா ஆக்சாலிக் அமிலக் கரைசலின் திறன் (N1) = ---------N 


நிறை கணக்கிடுதல்  

1 லிட்டர் கரைசலில் கரைந்துள்ள, படிக ஆக்சாலிக் அமிலத்தின் நிறை = ஆக்சாலிக் அமிலக் கரைசலின் திறன் (நார்மாலிட்டியில்) x சமான நிறை

1250 mL கரைசலில் கரைந்துள்ள படிக ஆக்சாலிக் அமிலத்தின் நிறை = ஆக்சாலிக் அமிலக் கரைசலின் திறன் × 63 × 1250 / 1000 = கிராம்


முடிவு

கொடுக்கப்பட்ட கரைசலில் 1250 mL-ல் கரைந்துள்ள படிக ஆக்சாலிக் அமிலத்தின் நிறை ----------------- கிராம்


வேதியியல் : செய்முறை