Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | கலவையின் வகைகள்

அறிவியல் - கலவையின் வகைகள் | 9th Science : Matter Around Us

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

கலவையின் வகைகள்

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் பெரும்பாலானவை கலவைகளாகும். சிலவற்றின் பகுதிப்பொருட்களை நம்முடைய வெற்றுக் கண்களால் பார்க்க இயலும், ஆனால் பெரும்பாலான கலவைகளின் பல்வேறு பகுதிப்பொருட்கள் நம்முடைய வெற்றுக் கண்களுக்கு புலப்படுவதில்லை. அவை பார்ப்பதற்கு ஒரே வகையான இயைபைப் பெற்றிருப்பது போல் தெரியும்.

மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலவைகள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

1. ஒருபடித்தான மற்றும் பலபடித்தான கலவை

ஒருபடித்தான கலவையில் அதன் பகுதிப்பொருட்களை தனித்தனியாகப் பார்க்க இயலாது. இக்கலவையில் பகுதிப்பொருட்கள் சீராகக் கலந்து ஒத்த பண்புகளைப் பெற்றிருக்கும். குழாய் நீர், பால், காற்று, பனிக்கூழ், சர்க்க ரைப் பாகு, மை, எஃகு, வெண்க லம் மற்றும் உப்பு நீர்(படம் 10.4 ) போன்றவை ஒருபடித்தான கலவைகள் ஆகும்.

பலபடித்தான கலவையில் அதன் பகுதிப் பொருட்களை தனித்தனியாக பார்க்க இயலும். இக்கலவையின்ப குதிபொருட்கள் சீராக கலந்திருப்பதுமில்லை ; ஒத்த பண்புகளைப் பெற்றிருப்பதுமில்லை . மண், அயோடின் மற்றும் உப்புக் கலவை, சர்க்கரை மற்றும் மணல் கலவை, நீர் மற்றும் எண்ணெய்க்கலவை, சல்ஃபர் மற்றும் இரும்புத்தூள் கலவை, பால் மற்றும் தானியக் கலவை (படம் 10.4 ) போன்றவை பலபடித்தான கலவைகள் ஆகும்.

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்