தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 6.1 | 6th Maths : Term 1 Unit 6 : Information Processing

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 6.1


1. கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் தலா ஒரு கால் சட்டையும், வெள்ளை, நீலம், சிவப்பு வண்ணங்களில் தலா ஒரு மேல் சட்டையும் உன்னிடம் உள்ளன என்றால் ஒரே வண்ணத்தில் உள்ள ஆடைகளைத் தவிர்த்து எத்தனை வழிகளில் ஆடைகளை வெவ்வேறாக மாற்றி அணியலாம்?

விடை

6 வழிகள் உள்ளன,

கருப்புவெள்ளை , கருப்புநீலம், கருப்புசிவப்பு, நீலம்வெள்ளை மற்றும் நீலம்சிவப்பு


2. உன்னிடம் இரண்டு சிவப்பு மற்றும் இரண்டு நீல வண்ணங்களில் கட்டைகள் உள்ளன. அக்கட்டைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி எத்தனை நான்கு தளக் கட்டிடம் அமைக்கலாம்? அவற்றை வரிசைப்படுத்துக.

விடை

6 வழிகள் உள்ளன

சிவப்புநீலம்சிவப்புநீலம்

சிவப்புசிவப்புநீலம்நீலம்,

நீலம்சிவப்புசிவப்புநீலம்,

நீலம்சிவப்புநீலம்சிவப்பு,

நீலம்நீலம்சிவப்புசிவப்பு மற்றும் 

சிவப்புநீலம்நீலம்சிவப்பு


3. மாய முக்கோணத்தில் 1 லிருந்து 6 வரை எண்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி எத்தனை விடைகளைக் கொண்டு வரலாம்? ஆனால் அனைத்துப் பக்கங்களிலும் ஒரே கூடுதல் வரவேண்டும்.


விடை

இதன் ஒரு விடை



4. 1 இலிருந்து 9 வரை எண்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி

() மாய முக்கோணத்தை அமைக்க முடியுமா?

() எத்தனை மாய முக்கோணங்களை அமைக்கலாம்?

() மாய முக்கோணத்தில் பக்கங்களின் கூடுதலை எழுதுக.


விடை

(i) ஆம் 

(ii) 5 

(iii) 17, 19, 20, 21, 23


5. 1 இலிருந்து 17 வரை உள்ள ஒற்றை எண்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி மாய முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கங்களின் கூடுதல் 30 என வருமாறு அமைக்க.


விடை: 



6. 1 இலிருந்து 7 வரை எண்களைப் பயன்படுத்தி வட்டங்களை நிரப்பி, ஒவ்வொரு நேர்க்கோட்டிலும் கூடுதல் ஒரே எண்ணாக வருமாறு அமைக்க.


விடை: 



7. 1 இலிருந்து 12 வரை எண்களைப் பயன்படுத்தி 12 வட்டங்களில் நிரப்ப வேண்டும். ஓர் எண்ணை ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 6 பக்கங்களிலும் தனித்தனியாகக் கூடுதல் 26 என வருமாறு எத்தனை வழிகளில் அமைக்கலாம்?


விடை: 



8. பின்வரும் படங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?


விடை

(i) 12 முக்கோணங்கள் 

(ii) 16 முக்கோணங்கள் 

(iii) 32 முக்கோணங்கள் 

(iv) 35 முக்கோணங்கள்


9. பின்வரும் படத்தில் 10 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

i)

(ii)

விடை:  (i) 55  (ii) 100


10.

மேற்கண்ட புள்ளி அமைப்பில்

(i) அடுத்த அமைப்பை வரைக.

(ii) ஒவ்வோர் அமைப்பிலும் எத்தனை புள்ளிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அட்டவணைப்படுத்துக.

(iii) அமைப்பு விதியை விளக்குக.

(iv) 25 ஆவது அமைப்பில் எத்தனை புள்ளிகள் இருக்கும் எனக் காண்க.

விடை



11. பின்வரும் படங்களில் எத்தனை சதுரங்கள் உள்ளன?



விடை


(i) 20 சதுரங்கள்

(ii) 10 சதுரங்கள்


12. கீழே உள்ள படத்தில் எத்தனை வட்டங்கள் உள்ளன?


விடை

7 வட்டங்கள்


13. பின்வரும் படங்கள் அமையப் பயன்படுத்தப்பட்ட குறைந்த அளவு நேர்க்கோடுகளின் எண்ணிக்கையைக் காண்க.

(i)

(ii)

விடை

i) 10  ii) 12



இணையச் செயல்பாடு

தகவல் செயலாக்கம்

இறுதியில் கிடைக்கப்பெறும் படம்


படி–1 : இணைய உலாவியை திறந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை copy செய்து paste செய்யவும். (அல்லது) கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு செய்யவும். (அல்லது) கொடுக்கப்பட்டுள்ள துரித துலங்கள் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

படி 2 : "Genius Puzzles" என்ற பக்கம் தோன்றும். அங்கே முக்கோணம் தொடர்பான பல்வேறு புதிர்கள் இடம்பெற்றிருக்கும். இந்த பக்கத்தில் "HOW MANY TRIANGLES ARE THERE என்ற பகுதியை தெரிவு செய்யவும்..

படி–3 : புதிர்களைக் கணக்கிட்டு அதற்கான உங்கள் விடையைக் காண "View Answer" என்ற பகுதியை சொடுக்கவும்.


செயல்பாட்டிற்கான உரலி

தகவல் செயலாக்கம் : – https://gpuzzles.com/quiz/how–many–triangles–are–there– puzzles–with–answers/


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்