Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | மாய முக்கோணம்

தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 6 ஆம் வகுப்பு கணக்கு - மாய முக்கோணம் | 6th Maths : Term 1 Unit 6 : Information Processing

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

மாய முக்கோணம்

மாய முக்கோணத்தில் எண்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி ஒவ்வொரு பக்கங்களின் கூடுதலும் சமமாக இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.

2. மாய முக்கோணம்

மாய முக்கோணத்தில் எண்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி ஒவ்வொரு பக்கங்களின் கூடுதலும் சமமாக இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.

மாய முக்கோணத்தில் 1 முதல் 6 வரை எண்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தித் முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கங்களின் கூடுதல் 12 ஆக வருமாறு அமைக்கவும்.


படி 1 : முக்கோணத்தின் மூலைகளில் பெரிய எண்களை நிரப்பவும். (4, 5 மற்றும் 6)

படி 2 : சிறிய எண்கள் (1, 2 மற்றும் 3) பக்கங்களின் நடுவில் நிரப்பவும்.

படி 3 : அதாவது 1 4 இக்கும் 5 இக்கும் இடையிலும், 2 5, 6 இக்கு இடையிலும், 3 6, 4 இக்கு இடையிலும் வைத்தால் பின்வருமாறு கிடைக்கும்.

4 + 1 + 5 = 10

5 + 2 + 6 = 13

4 + 3 + 6 = 13


முதல் வரிசையில் 4, இரண்டாவது வரிசையில் 1, 3 மற்றும் மூன்றாவது வரிசையில் 5, 2, 6 என குறிப்பது தவறான முறையாகும்.

முக்கோணத்தின் பக்கங்களின் கூடுதல் 10, 13, மற்றும் 13. முக்கோணத்தின் மூன்று பக்கங்களிலும் ஒரே எண் கிடைக்கவில்லை. எனவே இது தவறான முறையாகும். மீண்டும் நடுவில் உள்ள எண்களைக் கீழே படத்தில் உள்ளவாறு மாற்றினால் 11, 14, 11 எனக் கிடைக்கின்றது. இதுவும் தவறான முறையாகும்.

4 + 2 + 5 = 11

5 + 3 + 6  = 14

4 + 1 + 6 = 11


முதல் வரிசையில் 4, இரண்டாவது வரிசையில் 2, 1 மற்றும் மூன்றாவது வரிசையில் 5, 3, 6 எனக் குறிப்பது தவறான அமைப்பாகும்.

4 + 3 + 5 = 12

5 + 1 + 6 = 12

4 + 2 + 6 = 12


முதல் வரிசையில் 4, இரண்டாவது வரிசையில் 3, 2 மற்றும் மூன்றாவது வரிசையில் 5, 1, 6 எனக் குறிப்பது சரியான முறையாகும். தற்போது நடுவில் உள்ள எண்களை மறுபடியும் மாற்றி அமைக்கும்போது முக்கோணத்தின் மூன்று பக்கங்களிலும் கூடுதல் 12 ஆகக் கிடைக்கிறது. இதுவே நமக்குத் தேவையான மாய முக்கோணமாகும்.


3. படத்திற்குள் பல படங்கள்

எடுத்துக்காட்டுகள்

படத்தில் எத்தனை முக்கோணங்கள் உள்ளன?



 (i) தீர்வு


A,B,C,D என்பன 4 முக்கோணங்கள்.

A & D; B & D மற்றும் D & C இன் இணைப்புகள் முக்கோணத்தை அமைக்காது.

A,B & D; A,C & D மற்றும் B,D & C களின் இணைப்புகளும் முக்கோணத்தை அமைக்காது.

A,B,C & D ஒரு முக்கோணத்தை அமைக்கும்.

ஃமொத்த முக்கோணங்கள் = 4 + 1 = 5

(ii) தீர்வு


A, B, C, D மற்றும் E என்பன 5 முக்கோணங்கள்.

இவற்றில் எந்த இரு முக்கோணங்களும் இணைந்து புதிய முக்கோணத்தை அமைக்காது.

A, F & C; A, F & D; B, F & E; B, F & D மற்றும் C, F & E என்பன முக்கோணத்தை அமைக்கும்.

அதாவது, 1 + 1 + 1 + 1 + 1 = 5 முக்கோணங்கள்

ஃமொத்த முக்கோணங்கள் = 5 + 5 =10

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்