பருவம் 2 அலகு 1 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : History : Term 2 Unit 1 : Vedic Culture in North India and Megalithic Culture in South India

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 1 : வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 1 : வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சிகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1 ஆரியர்கள் முதலில் -------------------------- பகுதியில் குடியமர்ந்தனர்.

அ) பஞ்சாப்

ஆ) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

இ) காஷ்மீர்

ஈ) வடகிழக்கு

[விடை : அ) பஞ்சாப்]

 

2. ஆரியர்கள் -----------------லிருந்து வந்தனர்.

அ) சீனா

ஆ) வடக்கு ஆசியா

இ) மத்திய ஆசியா

ஈ) ஐரோப்பா

[விடை : இ) மத்திய ஆசியா]

 

3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" -------------- லிருந்து எடுக்கப்பட்டது.

அ) பிராமணம்

ஆ) ஆரண்யகம்

இ) வேதம்

ஈ) உபநிடதம்

[விடை : ஈ) உபநிடதம்]

 

4. வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

அ) 1/3

ஆ) 1/6

இ) 1/8

ஈ) 1/9

[விடை : ஆ) 1/6]

 

||. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு.

 

1 கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.

அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

இ) கூற்று சரி; காரணம் தவறு

ஈ) கூற்று தவறு; காரணம் சரி

[விடை :ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.]

 

2. கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

அ) கூற்று 1 தவறானது

ஆ) கூற்று 2 தவறானது

இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை

ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானவை

[விடை : இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை]

 

3. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.

அ) ஒரு கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம்.

ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.

இ) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்.

ஈ) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.

[விடை : ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.]

 

4. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?

அ) கிராமா < குலா விஷ்<ராஷ்டிரம்< ஜனா

ஆ) குலா < கிராமா< விஷ்< ஜனா< ராஷ்டிரம்

இ) ராஷ்டிரம் < ஜனா< கிராமா குலா< விஷ்

ஈ) ஜனா < கிராம < குலா< விஷ்< ராஷ்டிரம்

[விடை : ஆ) குலா < கிராமா< விஷ்< ஜனா< ராஷ்டிரம்]

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1 வேதப்பண்பாடு செம்புகால பண்பாடு இயல்பைக் கொண்டிருந்தது.

2 வேதகாலத்தில் மக்களிடமிருந்து பாலி என்ற வரி வசூலிக்கப்பட்டது.

3 குருகுலக்கல்வி. முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.

4 ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி  மாவட்டத்தில் அமைந்துள்ளது.

 

IV. சரியா? தவறா?

 

1 பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியக் தொல் பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன. விடை : சரி

2. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும். விடை : சரி

3. படைத்தளபதி 'கிராமணி' என அழைக்கப்பட்டார். விடை : தவறு

4 கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும். விடை : சரி

5 பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விடை : சரி

 

V. பொருத்துக.

அ) கீழடி - 1. பகடை

ஆ) பொருந்தல் - 2. கொழு முனைகள்

இ) கொடுமணல் - 3. சுழல் அச்சுக்கள்

ஈ) ஆதிச்சநல்லூர் - 4. தங்க ஆபரணங்கள்

அ) 4 3 2 1

ஆ) 3 4 1 2

இ)  1 3 4 2

ஈ) 1 2 3 4

விடை : ஈ) 1 2 3 4

 

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி.

 

1. நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக. 

• ரிக்

• யஜூர் 

• சாம 

• அதர்வ

 

2. வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை?

• யானைகள்

• பசு 

• வெள்ளாடு 

• செம்மறியாடு 

• குதிரை

 

3. ‘பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.

 

4. 'கற்திட்டைகள்' என்பது என்ன?

• கற்திட்டைகள் பெருங்கற்காலத்தின் நினைவுச் சின்னம்

• இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்படும். அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும்.

 

5. முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?

இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஜாடிகள் ‘முதுமக்கள் தாழிகள் ஆகும். 

 

6. வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக.

• நிஷ்கா 

• சத்மனா (தங்கம்) 

• கிருஷ்ணாலா (வெள்ளி)

 

7. தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

• முதுமக்கள் தாழிகள் 

• கற்திட்டைகள் 

• நினைவு கற்கள்

• நடுகற்கள்

 

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.

 

1. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

• கொடுமணல் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது.

• பதிற்றுப் பத்தில் இடம் பெற்றுள்ள கொடுமணம் என்னும் ஊர் இதுவே என அடையாளப்படுத்தப்படுகிறது.

• தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட 300க்கும் அதிகமான மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

• நூல் சுற்றும் சுழல் அச்சுகள், சுருள்கள், துணிகளின் சிறிய துண்டுகள், கருவிகள், ஆயுதங்கள் குறிப்பாக சிவப்பு நிற மணிக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

• புதைகுழி மேட்டிற்கு அருகே நினைவுக்கல் காணப்படுகிறது.

2. வேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.

• ரிக் வேத காலத்தில் மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார். 

• பெண்கள் தனது கணவருடன் வீட்டில் சடங்குகள் நடத்தினர்,

• குழந்தைத் திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை.

• விதவை மறுமணத்திற்கு தடை இல்லை.

• சொத்துரிமையும், பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.

• பின் வேதகாலத்தில் சடங்குகளை நடத்துதல், விதவை மறுமணம், கல்வி ஆகியன மறுக்கப்பட்டது. பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது.

 

VII. உயர் சிந்தனை வினா.

 

1 குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

• நவீன கால கல்வி முறையை ஒப்பீடு செய்யும் பொழுது குருகுலக் கல்வி முறை என்பது பழங்காலக் கற்றல் முறை.

• மாணவர்கள் (சிஷ்யர்கள்) குருவுடன் தங்கியிருந்து, அவருக்குச் சேவை செய்து அதே வேளையில் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்வர்.

• வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களைக் கற்றனர். அனைத்தையும் மனப்பாடம் செய்தனர்.

• நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறி முறைகள், ஜோதிடம், கணிதம், இராணுவ உத்திகள் ஆகியன கற்றுக் கொடுக்கப்பட்ட பாடங்கள்.

• இரு பிறப்பாளர்கள் மட்டுமே மாணவர்களாகச் சேர்க்கப்பட்டனர். ஒழுக்கமான வாழ்க்கைக்கான பயிற்சி வழங்கப்பட்டது.

 

IX. பெருமிதமும் மகிழ்ச்சியும்-உண்மைகளை நாம் கண்டறிவோம்.


தொல் பொருள் ஆய்விடங்கள்

ஆதிச்சநல்லூர்

கீழடி

பையம்பள்ளி

பொருந்தல்

கொடுமணல்

தொல்லியல் கண்டுபிடிப்புகள்

தமிழ் - பிராமி எழுத்துக்கள்

ரோமானிய தொல் பொருட்கள்

இரும்புக் கருவிகள்

அரிசி நிரப்பப்பட்ட பானை

சுழல் அச்சுக்கள்

உண்மைகள்

வரலாற்றுக்கு முந்திய பண்பாடு இருந்துள்ளது

விடை :

• இந்தோ - ரோமானிய வணிகத் தொடர்புக்கு சான்று.

• இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்று

• மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்ததற்கான சான்று

• நெசவுத் தொழில் நடைபெற்றதற்கான சான்று

 

X. மாணவர் செயல்பாடு


1. புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குதல்

சுருதி, கிராமணி, ராஷ்டிரம், இரும்புக்காலம், நாடோடிகள், பண்டமாற்று

விடை :

• வாய்மொழி வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டவை சுருதி ஆகும்.

• கிராமத்திற்கு கிராமணி தலைவர் ஆவார்.

• பல ஜனாக்கள் இணைந்து ராஷ்ட்ரா உருவாயின.

• வட இந்தியாவின் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவின் இரும்புக்காலமும் சம காலத்தைச் சேர்ந்தவை.

• ரிக்வேத காலத்தில் பண்டமாற்று முறை பரவலாகக் காணப்பட்டது.

 

2. வார்த்தை விளையாட்டு


1. ஒரு கணவாய்

2. மத போதனையைக் கொண்ட நூல்

3. கிராமங்களின் தொகுதி

4. இனக்குழு மன்றம்

5. மக்கள் மன்றம்

6. அக்னி

7. தங்க நாணயம்

8. வேதகாலம்

9. இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் உள்ள நினைவுச் சின்னம்.

 

விடை :

1. கைபர்

2. ஸ்மிருதி

3. விஸ்

4. கானா

5. சமிதி

6. நெருப்பு 

7. சத்மனா

8. இரும்புக்காலம்

9. கற்திட்டை


 

XI வாழ்க்கைத் திறன்

ஆசிரியரின் உதவியோடு செய்தித் தாள்களிலிருந்து தொல்லியல் கண்டுபிடிப்புகள் குறித்த செய்திகளைச் சேகரிக்கவும்.

கல்விச் சுற்றுலா

நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள தொல்லியல் சார்ந்த ஓர் இடத்திற்குச் சென்று வரவும்.

 

XII. கட்டக வினாக்கள்


இரண்டு இதிகாசங்களைக் குறிப்பிடவும்.

விடை : இராமாயணம், மகாபாரதம்

தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது இரண்டு இரும்புக்கால வாழ்விடங்களின் பெயர்களைக் கூறுக

விடை :  நினைவுகற்கள்

இறந்தவரின் நினைவாக நடப்படும் ஒற்றைக் கல்தூணின் பெயர்

விடை :  கீழடி

தொடக்கால ஆரியர்கள் வேளாண் முறை என்ன?

விடை :  பையம்பள்ளி, பொருந்தல்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சங்க காலத்தைச் சேர்ந்த நகரத்தின் பெயர்

விடை : அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறை

வேதகாலத்தில் உருவான இரண்டு பெரிய நகரங்களின் பெயரென்ன?

விடை : அயோத்தி, இந்திரப் பிரஸ்தம்

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 1 : வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்