பருவம் 3 அலகு 3 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : History : Term 3 Unit 3 : The Age of Empires: Guptas and Vardhanas

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 3 : பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 3 : பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 

1. குப்த வம்சத்தை நிறுவியவர் ------------ ஆவார்.

அ) முதலாம் சந்திரகுப்தர்

ஆ) ஸ்ரீ குப்தர்

இ) விஷ்ணுகோபர்

ஈ) விஷ்ணுகுப்தர்

[விடை : ஆ) ஸ்ரீ குப்தர்]

 

2. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் -------------------- ஆவார்.

அ) காளிதாசர்

ஆ) அமரசிம்மர்

இ) ஹரிசேனர்

ஈ) தன்வந்திரி

[விடை : இ) ஹரிசேனர்]

 

3. சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் ---------- என்ற இடத்தில் உள்ளது.

அ) மெக்ராலி

ஆ) பிதாரி

இ) கத்வா

ஈ) மதுரா

[விடை : அ) மெக்ராலி]

 

4. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர்  -----------------

அ) சரகர்

ஆ) சுஸ்ருதர்

இ) தன்வந்திரி

ஈ) அக்னிவாசர்

[விடை : ஆ) சுஸ்ருதர்]

 

5 வங்காளத்தின் கௌட அரசர் --------------------

அ) சசாங்கர்

ஆ) மைத்திரகர்

இ) ராஜவர்த்தனர்

ஈ) இரண்டாம் புலிகேசி.

[விடை : அ) சசாங்கர்]

 

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து, சரியான விடையை () செய்யவும்


1. கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.

காரணம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியைமணமுடித்தார்.

அ) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

ஆ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

[விடை: அ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே]

 

2. கூற்று: 1 தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை

கூற்று: 2 குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்

அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி

ஆ) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி

இ) இரண்டு கூற்றுகளும் சரி

ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு

விடை : அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி

 

3. கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?

அ) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் - விக்கிரமாதித்யர்

ஆ) முதலாம் சந்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்

இ) ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் - விக்கிரமாதித்யர் - முதலாம் சந்திரகுப்தர்

ஈ) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் - சமுத்திரகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர்

விடை : அ) ஸ்ரீகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர் - சமுத்திரகுப்தர் – விக்கிமாதித்யர்

 

4. கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது / எவை சரியானது / சரியானவை என்பதைக் கண்டறியவும்.

1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.

2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.

அ) 1 மட்டும் சரி

ஆ) 2 மட்டும் சரி

இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி

ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு

விடை : அ) 1 மட்டும் சரி

 

5. பொருந்தாததை வட்டமிடுக.

 

1. காளிதாசர் ஹரிசேனர் சமுத்திரகுப்தர் சரகர்

2. ரத்னாவளி ஹர்சசரிதா நாகநந்தா பிரியதர்சிகா

 

III. கோடிட்ட இடங்களை நிரப்புக


1. இலங்கை அரசர் ஸ்ரீமேகவர்மன் சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.

2. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின்போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார்.

3. ஹூணர்கள் படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

4. நிலவரி அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.

5. குப்தர்களின் அலுவலக மொழி சமஸ்கிருதம்

6. பல்லவ அரசர் விஷ்ணுகோபன் சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.

7 வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ஹர்ஷவர்த்தனர் ஆவார்.

8. ஹர்ஷர் தலைநகரை தானேஷ்வரி லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.

 

IV. சரியா / தவறா

 

1. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார். விடை : சரி

2 குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ - ஆரிய பாணியை ஒத்துள்ளன. விடை : தவறு

3. குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை. விடை : தவறு

4 ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர். விடை : தவறு

5. ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர். விடை : தவறு

 

V. பொருத்துக

அ)

அ. மிகிரகுலர் - 1.வானியல்

ஆ. ஆரியபட்டர் - 2. குமாரகுப்தர்

இ. ஓவியம் - 3. ஸ்கந்தகுப்தர்

ஈ. நாளந்தா பல்கலைக்கழகம் - 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்

உசார்த்தவாகா - 5.பாக்

அ) 1, 2, 4, 3, 5

ஆ) 2, 4, 1, 3, 5

இ) 3, 1, 5, 2, 4

ஈ) 3, 2, 1, 4, 5

விடை : இ) 3, 1, 5, 2, 4

 

ஆ)

அ. பாணர் - 110,000 மாணவர்கள்

ஆ. ஹர்ஷர் - 2. பிரயாகை

இ. நாளந்தா பல்கலைக்கழகம் - 3. ஹர்ஷ சரிதம்

ஈ. யுவான் சுவாங் - 4. ரத்னாவளி

உ பௌத்த சபை - 5. சி - யூ-கி

அ) 4, 3, 2, 1, 5

ஆ) 5, 2, 1, 3, 4

இ) 3, 5, 1, 2, 4

ஈ) 2, 1, 3, 4, 5

விடை : இ) 3, 5, 1, 2, 4

 

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

 

1. 'கவிராஜா' என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?

‘கவிராஜா' என்ற பட்டம் சமுத்திர குப்தருக்கு வழங்கப்பட்டது. > ஏனெனில் அவர் கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவா

 

2 நாளந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட்ட பாடப்பிரிவுகள் யாவை?

> பௌத்த தத்துவம்

> யோகா

> வேத இலக்கியங்கள்

> மருத்துவம்.

 

3. அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக

> குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப் படுத்தினர்.

> அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.

 

4. உலோகவியலில் குப்தர்களின் சாதனைகளை எடுத்துக் கூறுக.

> உலோகவியலில் குப்தர்களின் சாதனை எனப்படுவது மெக்ராலி இரும்புத்தூணாகும்.

> இது டெல்லி யில் சந்திரகுப்தரால் நிறுவப் பட்டதாகும். > இத்தூண் இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது.

 

5. ஹூணர்கள் என்போர் யார்?

> ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினர்.

> இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர்.

 

6. ஹர்ஷர் காலத்தில் வசூலிக்கப்பட்ட மூன்று வகையான வரிகளைக் குறிப்பிடுக.

> பாகா

> ஹிரண்யா

> பாலி

 

7. ஹர்ஷர் எழுதிய நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

> ரத்னாவளி

> நாகநந்தா

> பிரியதர்சிகா

 

VII. சுருக்கமான விடையளிக்கவும்

 

1. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

பிரசஸ்தி (மெய்க்கீர்த்தி) :

> பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் புகழ்வது. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காக தூண்களில் பொறிக்கப்பட்டன.

 

. சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.

சமுத்திர குப்தர் மகத்தான போர்த்தளபதி. அவர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார். அவர் பல்லவ அரசர் விஷ்ணு கோபனை தோற்கடித்தார். அவர் வட இந்தியாவில் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார். அவர் தென்னிந்தியாவில் 12 அரசர்களை சிற்றரசர்களாக்கி கப்பம் கட்டச் செய்தார். அவரின் மேலாதிக்கத்தை கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் ஏற்றுக் கொண்டனர்.

 

3 குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?

குப்தர் காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல். ஷேத்ரா வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் கிலா தரிசு நிலங்கள் அப்ரகதா வனம் அல்லது காட்டு நிலங்கள் வஸ்தி குடியிருப்பதற்கு உகந்த நிலங்கள் கபத சரகா மேய்ச்சல் நிலங்கள்

 

4. சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக

சிரெஸ்தி : சிரெஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள். சார்த்தவாகா : சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.

 

5. கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.

> முன்பிருந்த மரபான பாறைக் குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களை முதன் முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே. இக்கோவில்கள் கோபுரங்களோடும், விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் கட்டப்பட்டன.

> மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா, பாக், உதயகிரி, ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்காலக்கட்டத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் திராவிடப் பாணியை ஒத்திருக்கின்றன.

 

6. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.

காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள் சாகுந்தலம், மாளவிகாக்கனிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும். அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகு வம்சம், குமார சம்பவம், ரிது சம்காரம் ஆகும்.

 

7 ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.


> ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். சிறந்த கவிஞர்களும் கலைஞர்களும் அவரைச் சூழ்ந்து இருந்தனர்.

> ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா ஆகியவை அவருடைய புகழ்பெற்ற நூல்கள்.

> அவரின் அவையை பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அலங்கரித்தனர்.

 

VIII. உயர் சிந்தனை வினாக்கள்


1. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -

அ) நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை

ஆ) தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை

இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை

ஈ) மன்னர்களின் ஆடம்பர இயல்பை

விடை : இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை

 

2. பண்டைய புகழும்மிக்க அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

அ) குகைச் சுவர்களில்

ஆ) கோவில்களின் விதானங்களில்

இ) பாறைகளில்

ஈ) பாப்பிரஸ் இலைகளில்

விடை : அ) குகைச் சுவர்களில்

 

3. குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?

அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

ஆ) தென்னிந்தியப் படையெழுச்சி

இ) ஹூணர்களின் படையெடுப்பு

ஈ) மதசகிப்புத்தன்மை

விடை : அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

 

4 குப்தர்கள் காலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?

நவீன உலகிற்குவிட்டுச் சென்ற பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியான தசம எண் முறையும். ஆரியப்பட்டர் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். அவர்தான் பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர்.

 

IX. மாணவர் செயல்பாடுகள்


1. காளிதாசரின் நாடகம் ஒன்றினை வகுப்பறையில் மேடையேற்றவும்.

2. மௌரியர் காலச் சமுதாயத்திற்கும் குப்தர்கள் காலச் சமுதாயத்திற்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பீடு செய்க.

 

X. வாழ்க்கைத் திறன்கள்


1. வானியல் துறைக்கு ஆரியபட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பினைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கவும்.

2. செயற்கைக்கோள் ஏவுவதைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள அருகேயுள்ள இஸ்ரோ (ISRO) மையத்திற்குச் சென்று வரவும்.

 

XI. கட்டக வினா



6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 3 : பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்