Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | இடம் பெயர்வுக்கான காரணிகள்

அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இடம் பெயர்வுக்கான காரணிகள் | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்

இடம் பெயர்வுக்கான காரணிகள்

மக்கள் இடம் பெயர்தலுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவைகள் கீழ்க்காண் இருதலைப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன.

இடம் பெயர்வுக்கான காரணிகள்

மக்கள் இடம் பெயர்தலுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவைகள் கீழ்க்காண் இருதலைப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன.


1. சாதகமான காரணிகள்

ஓர் இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள் சாதக காரணிகள் அல்லது இழு காரணிகள் (Pull Factors) என அழைக்கப்படுகின்றன.


2. பாதகமான காரணிகள்

மக்களை தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறச் செய்யும் காரணிகள் உந்து காரணிகள் (Push Factors) அல்லது பாதகக் காரணிகள் என அழைக்கப்படுகின்றன.



இடம் பெயர்வுக்கான காரணிகள்

மனிதகுல இடம் பெயர்வுக்கான பல்வேறு காரணிகள் 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவைபின்வருமாறு:

அ. சூழியல் அல்லது இயற்கை காரணங்கள்

சூழியல் இடம் பெயர்வு இயற்கையான ஒன்றாகும். எரிமலை வெடிப்பு, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி போன்றவை இவ்வகை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணிகளாகும். இக்காரணிகள் மக்களைத் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி புதிய பகுதிகளில் குடியேற உந்துகின்றன. நீர் வளம், பிரச்சனைகளற்ற நிலப்பகுதிகள், மாசற்ற நிலைகள் போன்றவை இடம் பெயர்பவர்களை ஈர்க்கும் சக்திகளாக உள்ளன.

ஆ. பொருளாதார காரணங்கள்

ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயர்வதற்கு பொருளாதாரம் மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும். இடம் பெயர்வின் அளவுமற்றும் திசைகளைப்பல்வேறு பொருளாதார காரணிகள் தீர்மானிக்கின்றன. வளமான வேளாண் நிலம், வேலைவாய்ப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி போன்ற பொருளாதார காரணிகள் புலம் பெயர்வோரை ஈர்க்கின்றன. பெருந்திரளான மக்களின் ஏழ்மை நிலை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்றவை மக்களை தங்கள் பூர்வீக இடத்திலிருந்து சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களுக்கு வெளியேற வைக்கின்றன.

 

இ. சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள்

சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்களும் இடம் பெயர்வில் தமது பங்கை வகிக்கின்றன.


1. பெண்களின் திருமணத்திற்குப் பின் இடம்பெயர்வு.

2. புனித யாத்திரைகளுடன் தொடர்புடைய இடம்பெயர்தல் ஆகியவை சமூக கலாச்சாரப் பழக்கத்தினை அடிப்படையாக கொண்டவையாகும்.

 

ஈ. மக்கள் தொகை சார்ந்த காரணங்கள்

மக்கள் தொகையின் உட்கூறு பண்புகளான வயது, பாலினம், அதிக மற்றும் குறைந்த மக்கள் தொகை போன்றவை இடம் பெயர்வுக்கான முக்கிய காரணங்கள் ஆகும். இளைஞர்களின் இடம்பெயர்வு மற்ற பிரிவினரை விட அதிகம் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு புலம் பெயர்கிறார்கள். பொதுவாக அதிக மக்கள் தொகை ஒரு உந்து காரணியாகவும் குறைவான மக்கள்தொகை இழு காரணியாகவும் கருதப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா

ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, - லத்தீன் அமெரிக்கா, கரீபியன் போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்தோரில் ஆண்களை விட பெண்களே அதிகம். ஆனால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா குறிப்பாக மேற்கு ஆசியாவில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக புலம் பெயர்கிறார்கள் ஆதாரம்: (சர்வதேச இடம்பெயர்தல் அறிக்கை , 2017)

 

உ. அரசியல் காரணங்கள்

பல்வேறு அரசியல் காரணங்களான காலனி ஆதிக்கம், போர்கள், அரசாங்கக் கொள்கைகள் போன்றவை காலங்காலமாக இடம்பெயர்தலில் முக்கியப் பங்கை வகித்து வருகின்றன. பழங்காலத்திலிருந்தே போர்கள் இடம் பெயர்வுக்கான குறிப்பிடத்தக்க காரணங்களில் ஒன்றாக இருந்துள்ளது.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 4 : இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்