Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | நம்பிக்கைகளும் வழிபாட்டுமுறையும் - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

வரலாறு - நம்பிக்கைகளும் வழிபாட்டுமுறையும் - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் | 9th Social Science : History : Early Tamil Society and Culture

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

நம்பிக்கைகளும் வழிபாட்டுமுறையும் - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

சங்க காலச் சமுகம் மற்றும் பொருளாதார அமைப்பில் பன்மைத்துவம் காணப்படுவது போலவே மக்களின் வழிபாட்டு முறைகளிலும் பன்மைத்துவம் காணப்படுகிறது.

நம்பிக்கைகளும் வழிபாட்டுமுறையும்

சங்க காலச் சமுகம் மற்றும் பொருளாதார அமைப்பில் பன்மைத்துவம் காணப்படுவது போலவே மக்களின் வழிபாட்டு முறைகளிலும் பன்மைத்துவம் காணப்படுகிறது. ஆவி வழிபாடு, மூதாதையார் வழிபாடு, வீரர்கள் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு போன்றவை சங்க காலத்தில் இருந்தன.

ஐந்திணைகளுக்கும் உரிய வழிபாட்டு கடவுள்களைத் தொல்காப்பியம்சுட்டுகிறது.குறிஞ்சிக்கு முருகன், முல்லைக்குத் திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன், பாலைக்குக் கொற்றவை என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

எனினும் மக்கள் வீரமரணம் எய்திய வீரர்களையும், தமது குல மூதாதையர்களையும் அதிக அளவில் வழிபட்டனர். இயற்கைக்கு மீறிய ஆற்றல் கொண்ட அணங்கு குறித்துச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

குகைகளில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் மூலம் சமண சமயம் வழக்கில் இருந்தமை தெரிகிறது. வேள்விகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

சில இடங்களில் புத்த சமயமும் இருந்தது. வெவ்வேறு குழுக்கள் வேறுவேறான வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர்.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்