Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | C++மீது பைத்தான் பண்புக்கூறுகள்

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்

C++மீது பைத்தான் பண்புக்கூறுகள்

பைத்தான் தேவையற்ற (garbage) மதிப்புகளைச் சேகரிக்கும் தானியங்கியைப் பயன்படுத்துகிறது. இந்த பண்புக்கூறு C++ ல் கிடையாது.

C++மீது பைத்தான் பண்புக்கூறுகள்

• பைத்தான் தேவையற்ற (garbage) மதிப்புகளைச் சேகரிக்கும் தானியங்கியைப் பயன்படுத்துகிறது. இந்த பண்புக்கூறு C++ ல் கிடையாது.

• C++ நிலையான வகையைச் சார்ந்த மொழி, ஆனால் பைத்தான் ஒரு மாறக்கூடிய வகையைச் சார்ந்த மொழியாகும்.

• பைத்தான் வரி மொழி மாற்றி மூலம் இயங்குகிறது. ஆனால் C++ மொழி முன் தொகுக்கப்பட்டது.

• C++ நிரல் குறிமுறையைக் காட்டிலும் பைத்தான் குறிமுறை 5லிருந்து 10 தடவைகள் (மடங்குகள்) குறைவானது.

• பைத்தானில், வெளிப்படையாக தரவினங்களை அறிவிக்க தேவையில்லை. ஆனால் C++-ல் அவை அறிவிக்கப்பட வேண்டும்.

• பைத்தானில், ஒரு செயற்கூறு எந்த வகை செயலுருபையும் ஏற்கும். மேலும், முன்னதாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பல மதிப்புகளை திருப்பியனுப்பும். ஆனால் C++ return கூற்று ஒரே ஒரு மதிப்பை மட்டுமே திருப்பியனுப்பும்.

குறிப்பு

பைத்தான், நினைவக இடத்தை விடுவிக்க, தேவையற்ற பொருட்களை (உள்ளமைக்கப்பட்ட வகைகள் அல்லது இனக்குழு சான்றுருக்கள்) தானமைவாக நீக்குகிறது. அவ்வப்போது, பைத்தான், நினைவகப் பகுதிகளை விடுவித்து, பயன்பாட்டில் இல்லாதவைகளை மீட்டெடுக்கும் செயல்முறை தேவையற்ற மதிப்புகளை சேகரித்தல் (Garbage collection) என்றழைக்கப்படுகிறது.

12 வது கணினி அறிவியல் : அலகு 14 : MySql மற்றும் C++ உடன் பைத்தானை ஒருங்கிணைத்தல் : பைத்தானில் C++ நிரல்களை இறக்கம் செய்தல்