Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு - முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள் | 12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்

இந்திய தேசிய காங்கிரஸின் தேசியவாதத்தை உருவகப்படுத்திய மகாத்மா காந்தி ஆரிய சமாஜமும், அலிகார் இயக்கமும் முன்வைத்த குறுகிய தேசியவாதத்தை மறுத்தார். மேலும் பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்ட, அவற்றைக் கடந்த ஓர் அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க அவர் விரும்பினார்.

முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்

இந்திய தேசிய காங்கிரஸின் தேசியவாதத்தை உருவகப்படுத்திய மகாத்மா காந்தி ஆரிய சமாஜமும், அலிகார் இயக்கமும் முன்வைத்த குறுகிய தேசியவாதத்தை மறுத்தார். மேலும் பல்வேறு மதங்களுக்கு அப்பாற்பட்ட, அவற்றைக் கடந்த ஓர் அரசியல் அடையாளத்தை தோற்றுவிக்க அவர் விரும்பினார். பல்வேறு சாயல்களைக் கொண்ட அரசு ஆதரவு பெற்ற வகுப்புவாத சக்திகள் இருந்த போதிலும் இந்தியாவில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் பெரும் செல்வாக்குப் பெற்ற சக்தியாகத் திகழ்ந்தது. 1937இல் தேர்தல் நடைபெற்ற பதினோரு மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. மேலும் மூன்று மாகாணங்களில் மிகப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது. முஸ்லிம் லீக்கின் செயல்பாடு மோசமாகவே அமைந்தது. மொத்த முஸ்லிம் வாக்குகளில் 4.8 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே அது வெற்றி பெற்றது. காங்கிரஸ், மதச்சார்பற்ற மாபெரும் மக்கள் கட்சியாக எழுச்சி பெற்றது. ஆனால் அரசு அதற்கு இந்து அமைப்பு என்ற முத்திரையை இட்டது. முஸ்லிம் மக்களின் உண்மையான பிரதிநிதியாக முஸ்லிம் லீக்கை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. முஸ்லிம் லீக்கை காங்கிரசிற்கு சமமான சக்தியாகவே நடத்தியது.

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்