Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | நிதிப் பொருளியல்

பொருளாதாரம் - நிதிப் பொருளியல் | 12th Economics : Chapter 9 : Fiscal Economics

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்

நிதிப் பொருளியல்

நிதிப் பொருளியல், என்ற பதம் புதிய ஒன்றாகும். இதன் பழைய மற்றும் பிரசித்தி பெற்ற பாடம் 'பொது நிதி' என்பதாகும்.

நிதிப் பொருளியல்


ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை

- திருக்குறள் 478

புரிதலின் நோக்கங்கள்

1. நிதிப் பொருளியலின் பொருள் மற்றும் பாடக் கருத்தினை பற்றி அறிந்து கொள்ளுதல்,

2. நேர்முக, மறைமுக வரிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்,

3. நிதிக் குழுவின் பணிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.



அறிமுகம்

நிதிப் பொருளியல், என்ற பதம் புதிய ஒன்றாகும். இதன் பழைய மற்றும் பிரசித்தி பெற்ற பாடம் 'பொது நிதி' என்பதாகும். பொது நிதி என்ற பாடம் அரசு நிதி பற்றிய செயல்பாடுகளோடு தொடர்புடையது. அரசு கருவூலத்தின் நிதி செயல்பாடுகள் பற்றி விவாதிக்கிறது. "பிசிகல்" என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான 'கூடை' என்ற பொருள்படும். இது "பொதுவான பை" என்பதை குறிக்கிறது. எனவே "பொதுநிதி" - என்பதை "நிதிப் பொருளியல்" என அழைக்கப்படுகிறது. 

பொதுநிதி என்பது ஓர் அரசு தனது நிதி வளங்களை உருவாக்குவது மற்றும் செலவழிப்பது பற்றி கூறுகிறது. குடிமக்களின் மொத்த விருப்பங்கள் பற்றி அரசு கருத்தில் கொள்கிறது. தற்கால அரசு நலம் பேணும் அரசாகும். தற்போது அரசின் செயல்பாடுகள் உள்ளார்ந்து பறந்து விரிந்து காணப்படுகிறது. இச்செயல்பாடுகளை செய்வதற்கு அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. இந்தபாடம் பொது வருவாய். பொதுச் செலவு, பொதுக் கடன், வரவு செலவுத் திட்டம், கூட்டரசு நிதி மற்றும் உள்ளாட்சி நிதி ஆகியவற்றை பற்றி விளக்குகிறது.


12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 9 : நிதிப் பொருளியல்