Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | வாயுக்களின் அடிப்படை விதிகள்

10வது அறிவியல் : அலகு 3 : வெப்ப இயற்பியல்

வாயுக்களின் அடிப்படை விதிகள்

வாயுக்களின் அழுத்தம், கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று அடிப்படை விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை 1. பாயில் விதி 2. சார்லஸ் விதி 3. அவகேட்ரோ விதி

வாயுக்களின் அடிப்படை விதிகள்

வாயுக்களின் அழுத்தம், கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று அடிப்படை விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை

1. பாயில் விதி

2. சார்லஸ் விதி

3. அவகேட்ரோ விதி

 

1. பாயில் விதி

மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.

P α 1/V


மாறா வெப்பநிலையில், மாறா நிறையுடைய நல்லியல்பு வாயுவின் அழுத்தம் மற்றும் பருமன் ஆகியவற்றின் பெருக்குத் தொகை மாறிலி எனவும் வரையறுக்கலாம்.

அதாவது PV = மாறிலி

 

2. சார்லஸ் விதி (பரும விதி)

பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஜேக்கஸ் சார்லஸ் என்பவர் இவ்விதியினை நிறுவினார். இவ்விதியின் படி, மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்.

அதாவது V α T

அல்லது  V / T = மாறிலி

 

3. அவகேட்ரோ விதி

அவோகேட்ரோ விதியின் படி, மாறா வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்.

அதாவது V α n

(அல்லது) V/n மாறிலி

 

ஒரு மோல் பொருளில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை அவோகேட்ரோ எண் என வரையறுக்கப்படும். இதன் மதிப்பு 6.023 × 1023 / மோல்.

 

10வது அறிவியல் : அலகு 3 : வெப்ப இயற்பியல்