Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | IV. குறுகிய விடை தருக.

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் | பொருளியல் | சமூக அறிவியல் - IV. குறுகிய விடை தருக. | 10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

IV. குறுகிய விடை தருக.

சமூக அறிவியல் : பொருளியல் : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: குறுகிய விடை தருக.

IV. குறுகிய விடை தருக.

 

1. உலகமயமாக்கல் என்றால் என்ன?

• உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பதாகும்.

• அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையை குறிக்கிறது.

 

2. உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.

• தொன்மையான உலகமயமாக்கல்

• இடைப்பட்ட உலகமயமாக்கல்

• நவீன உலகமயமாக்கல்

 

3. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

நாட்டில் பண்டங்களையும் அல்லது பணிகளையும் உற்பத்தி செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவனமாகும்.

 

4. உலகமயமாக்கலை சார்ந்த சீர்ருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக.

• சில தொழிற்சாலைகளை தவிர, தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.

• பொதுத்துறை நிறுவனத்திற்காக துவக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைப்பு.

• இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் வர்த்தகத்தில் ரூபாய் மாற்றத்தை  உருவாக்கியது.

• அயல்நாட்டு செலாவணி ஒழுங்குமுறை திருத்தப்பட்டது.

 

5. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?

நியாயமான வர்த்தகமானது, சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழி முறையாகும்.

 

6. “நியாயமான வர்த்தக  நடைமுறைகளின்” ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.

• பொருளாதார ரீதியில் பின்தங்கிய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.

• வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு.

• குழந்தை தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

• சுற்றுசூழலுக்கு மதிப்பளித்தல்.

 

7. “உலக வர்த்தக அமைப்பின்” முக்கிய நோக்கம் யாது?

உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள்கள் :

• அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்தல்.

• வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.

• முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.

• முழு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.

 

8. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.

• மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.

• வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.

• அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

• புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

• உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.

 

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்