Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளி

தமிழகத்தில் வேளாண்மை | பொருளியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளி | 9th Social Science : Economics: Tamil Nadu Agriculture

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை

சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : தமிழகத்தில் வேளாண்மை : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமாக விடையளி

IV. குறுகிய வினாக்களுக்கு விடையளி.


1. உணவுப் பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும், உணவல்லாத பயிர்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகளும் எழுதுக.

விடை:

உணவுப் பயிர்கள் :

1. நெல்,

2. சோளம்

உணவல்லாத பயிர்கள் :

1. தென்னை ,

2. பருத்தி

2. பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான காரணிகள் யாவை?

விடை:

தமிழகத்தில் பயிர் செய்யப்படும் பரப்பளவு 4544000 ஹெக்டேர்கள் ஆகும். இப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறும்.

மழைப்பொழிவு காலத்தில் போதுமான மழை இருந்தால் இப்பரப்பு கூடும்.

மழை பொய்த்தாலோ, குறைந்தாலோ இப்பரப்பு குறையும், இவ்வாறு பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான முக்கியக் காரணி மழைப் பொழிவு ஆகும்.

 

3. நிலத்தடி நீரின் அளவையும், தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?

விடை:

நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் கண்காணிக்கிறது.

 

4. பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?

விடை:

பயிரிடப்படும் நிலப்பரப்பு

நிலத்தடி நீர்

மழைப்பொழிவு

நீர் இருப்பு

காலநிலை

சந்தைவிலை

உற்பத்தித்திறன்

 

5. சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக.

விடை:

சிறு விவசாயிகள்:

1 1-2 ஹெக்டேர் நிலப் பரப்பில் சாகுபடி செய்வோர் சிறுவிவசாயிகள் ஆவர்.

2 மொத்த விவசாயிகளில் 14 விழுக்காட்டினர் சிறு விவசாயிகள் ஆவர்

3 மொத்த நிலப்பரப்பில் 26 விழுக்காடு நிலத்தில் விவசாயம் செய்கின்றனர்.

குறு விவசாயிகள்:

1. ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர் குறு விவசாயிகள் ஆவர்.

2. மொத்த விவசாயிகளில் 78 விழுக்காட்டினர் குறு விவசாயிகள் ஆவர்.

3. மொத்த நிலப்பரப்பில் 36 விழுக்காடு நிலத்தில் விவசாயம் செய்கின்றனர்.

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பொருளியல் : அலகு 4 : தமிழகத்தில் வேளாண்மை