Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சுருக்கமாக விடையளி

உள்ளாட்சி அமைப்புகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளி | 9th Social Science : Civics: Local Self Government

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள்

சுருக்கமாக விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : சுருக்கமான விடை தருக.

V. சுருக்கமான விடையளி.

1. கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?

விடை:

சொத்து வரி

தொழில் வரி

வீட்டு வரி

குடிநீர் இணைப்புக்கான கட்டணம்

நில வரி

கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

 

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

விடை:

மூன்று அடுக்கு அமைப்பு

கிராம சபை

தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்.

நிதி ஆணையத்தினை நிறுவுதல்.

மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு.

பெண்களுக்கு மூன்றில் ஒருபங்கு இடஒதுக்கீடு.

மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.

 

3. கிராம ஊராட்சிகளின் முக்கிய பணிகள் யாவை?

விடை:

குடிநீர் வழங்குதல்

வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல்

சாலைகளைப் பராமரித்தல்

தொகுப்பு வீடுகளைக் கட்டுதல்

சிறிய பாலங்களைப் பராமரித்தல்

இடுகாடுகளைப் பராமரித்தல்

வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல்

தெருக்களைச் சுத்தம் செய்தல்

பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்

தெருவிளக்குகளைப் பராமரித்தல்

கிராம நூலகங்களைப் பராமரித்தல்

 

4. உள்ளாட்சி அமைப்புகளின் விருப்பப்பணிகள் யாவை?

விடை:

கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல்.

சந்தைகளையும் திருவிழாக்களையும் நடத்துதல்

மரங்களை நடுதல்.

விளையாட்டு மைதானங்களைப் பராமரித்தல்

வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்.

பொருட்காட்சிகள் நடைபெறும் இடங்களைக் கட்டுப்படுத்துதல்

 

5. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

விடை:

பேரூராட்சி

நகராட்சி

மாநகராட்சி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : உள்ளாட்சி அமைப்புகள்