உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் | விலங்கியல் - கலைச்சொற்கள் | 11th Zoology : Chapter 7 : Body Fluids and Circulation

11 வது விலங்கியல் : பாடம் 7 : உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்

கலைச்சொற்கள்

11 வது விலங்கியல் : பாடம் 7 : உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் : கலைச்சொற்கள்

கலைச் சொற்கள்

 

முக்கிய கலைச்சொற்கள் - விளக்கம்          

1. இரத்த குழாய்கள் (Blood Vessels) - இதயத்திலிருந்து உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தைச் செலுத்தி வினியோகித்த பிறகு இரத்தத்தை மீண்டும் இதயத்திற்கே கொண்டு வரும் பாதையாகச் செயல்படுபவை.

2. நுரையீரல் சுற்றோட்டம் (Pulmonary circulation) - இதயத்திற்கும், நுரையீரலுக்கும் இடையே இரத்தத்தை எடுத்துச்செல்லும் மூடிய வகை இரத்தக் குழாய்களைக் கொண்டது.

3. சிஸ்டெமிக் சுற்றோட்டம் (Systemic circulation) - இதயத்திற்கும் உடலின் பிற உறுப்பு மண்டலங்களுக்கும் இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் சுற்றுப்பாதை.

4. இதய நுரையீரல் உயிர்ப்பித்தல் (Cardiopulmonary resuscitation) (CPR) - முறையான சிகிச்சை அளித்து இதயம் மீண்டும் இயல்பாக இயங்கத் தொடங்கும் வரை மேற்கொள்ளப்படும் உயிர் காக்கும் சிகிச்சை முறை

5. பெருந்தமனி (Aorta) - இடது வென்டிரிக்கிளிலிருந்து இரத்தத்தை பிற பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் பெரிய தனித் தமனி அல்லது ஒற்றைத் தமனி

6. ஈரிதழ் வால்வு (Bicuspid valve) - மிட்ரல் வால்வு எனவும் அழைக்கப்படும் இடது ஆரிக்கிளுக்கும், இடது வென்டிரிக்கிளுக்கும் இடையே காணப்படும் இரு கதுப்புகளாலான இடது ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வு.

7. மூவிதழ் வால்வு (Tricuspid valve) - வலது ஆரிக்கிளுக்கும், வலது வென்டிரிக்கிளுக்கும் இடையே காணப்படும் மூன்று கதுப்புகளாலான வலது ஆரிக்குலோ வென்டிரிக்குலார் வால்வு.

8. கார்டே டென்டினே (Chordae tendineae) - இவை ஆரிக்குலோ வென்டிரிக்குலார் வால்வுகளின் (ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வுகள்) கதுப்புகளுக்கும், வென்ட்ரிக்கிள் சுவரிலுள்ள பாப்பில்லரி தசைகளுக்குமிடையே நீண்டு காணப்படும் தசை நாண்கள். இவை வென்டிரிக்கிளில் உள்ள உயர் அழுத்தத்தின் காரணமாக ஆரிக்குலோ வென்டிரிக்குலார் வால்வுகள் திறந்துவிடாதபடித் தடுக்கின்றன.

9. பாப்பில்லரி தசைகள் (Papillary muscles) - வென்டிரிக்கிளின் உட்சுவரிலிருந்து துருத்திக் கொண்டிருக்கும் சிறிய காம்பு வடிவ தசைகள், பாப்பில்லரி என்றால் பால் காம்பு () மார்பு காம்பு எனப் பொருள்.

10. சைனு ஏட்ரியல் முடிச்சு (S.A முடிச்சு) (Sinu-atrial nodd (S.A.node) - இதயத்தின் வலது ஆரிக்கிள் சுவரில் மேற்பெருஞ்சிரையின் திறப்பிற்கு அருகில் அமைந்துள்ள சிறப்புத் தன்மை வாய்ந்த சிறிய பகுதி.

11 வது விலங்கியல் : பாடம் 7 : உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்