Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | உலகமயமாக்கலின் வரலாறு

பொருளியல் - உலகமயமாக்கலின் வரலாறு | 10th Social Science : Economics : Chapter 2 : Globalization and Trade

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

உலகமயமாக்கலின் வரலாறு

உலகமயமாக்கல் என்ற சொல் பேராசிரியர் தியோடோர் லெவிட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகமயமாக்கல் வரலாற்று பின்னணியில் மூன்று நிலைகளில் விவாதிக்கப்பட்டது.

உலகமயமாக்கலின் வரலாறு

உலகமயமாக்கல் என்ற சொல் பேராசிரியர் தியோடோர் லெவிட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகமயமாக்கல் வரலாற்று பின்னணியில் மூன்று நிலைகளில் விவாதிக்கப்பட்டது.



தொன்மையான உலகமயமாக்கல்

சுமேரிய மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற ஒரு வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே உருவாக்கியது என்று ஆண்ட்ரே குந்தர் ஃபிராங்க் வாதிட்டார். உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஆரம்ப வடிவத்தை தொன்மையான உலகமயமாக்கல் என்று கிரேக்க (Hellenistic Period) காலத்தின் போது அழைக்கப்பட்டது. ரோம் பேரரசுக்கும் பார்த்தியன் பேரரசுக்கும் மற்றும் ஹான் வம்சத்துக்கும் இடையேயான வர்த்தக தொடர்பே உலகமயமாக்கலின் ஆரம்ப வடிவம். இந்த பேரரசுகளுக்கு இடையேயான வணிக உறவுகள் பட்டு சாலையின் (Silk Route) வளர்ச்சியை ஊக்கப்படுத்தியது.

இஸ்லாமிய காலம் கூட உலகமயமாக்கலில் ஒரு முக்கிய ஆரம்பகட்டமாக இருந்து வந்தது. மங்கோலிய பேரரசின் வருகை, மத்திய கிழக்கு மற்றும் சீனாவின் வர்த்தக மையங்களுக்கு உறுதியற்றதாக இருந்தாலும் பட்டு சாலை வழியாக பயணிக்க வசதியாக இருந்தது. இந்த நவீனத்திற்கு முந்தைய கால கட்டத்தில் நடந்த உலக பரிமாற்றம் சில நேரங்களில் தொன்மையான உலகமயமாக்கல் என்றழைக்கப்படுகிறது.


இடைப்பட்ட உலகமயமாக்கல்

உலகமயமாக்கலின் அடுத்த கட்டம் இடைப்பட்ட உலகமயமாக்கல் ஆகும். 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய பேரரசுகளின் எழுச்சியால் முதலில் போர்ச்சுகீசியர்கள், ஸ்பானியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கடல் வழி வாணிபம் மேற்கொண்டனர். உலகமயமாக்கல், 17ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் (1600) தனியார் வணிக நிறுவனம் போன்று உருவாக்கப்பட்டது. அதுவே முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்பட்டது. மேலும், முதல் டச்சு கிழக்கிந்திய நிறுவனம் (1602) உருவாக்கப்பட்டு வாணிபம் நடைபெற்றது.


நவீன உலகமயமாக்கல்

19ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் நவீன வடிவத்தை நெருங்கியது. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருந்தன. அவை, அந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டதும், 20ஆம் நூற்றாண்டில் வணிக உற்பத்தியில் அதிக பங்கினை பெற்றிருந்ததுடன், சேவைகள், வர்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி வணிகத்தில் எழுச்சியுற்றிருந்ததும் ஆகும்.

 



10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 2 : உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்