Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | ஒருபடித்தான மற்றும் பலபடித்தான சமநிலைகள்

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை

ஒருபடித்தான மற்றும் பலபடித்தான சமநிலைகள்

ஒரு படித்தான சமநிலையில், அனைத்து வினைபடுபொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் ஆகியன ஒரே நிலைமையில் காணப்படும்.

ஒருபடித்தான மற்றும் பலபடித்தான சமநிலைகள்

1. ஒருபடித்தான சமநிலை

ஒரு படித்தான சமநிலையில், அனைத்து வினைபடுபொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் ஆகியன ஒரே நிலைமையில் காணப்படும்.

எடுத்துக்காட்டாக,

H2(g) + I2 (g) 2HI (g)

மேற்கண்டுள்ள சமநிலையில் H2 I2  மற்றும் HI ஆகியன வாயு நிலைமையில் காணப்படுகின்றன.

இதைப்போலவே, பின்வரும் வினையில் வினைபடுபொருள்கள் மற்றும் வினைவிளை பொருள்கள் ஆகிய அனைத்தும் ஒரு படித்தான கரைசல் நிலைமையில் காணப்படுகின்றன.

2. பலப்படித்தான சமநிலை

சமநிலையில் உள்ள ஒரு வினையின், வினைபடுபொருள்கள், வினைவிளை பொருள்கள் ஆகியன வெவ்வேறு நிலைமைகளில் காணப்பட்டால் அச்சமநிலை பலபடித்தான சமநிலை எனப்படும்

எடுத்துக்காட்டு:

H2O (l) H2O (g)

CaCO3 (s) CaO (s) + CO2 (g)

11 வது வேதியியல் : அலகு 8 : இயற் மற்றும் வேதிச்சமநிலை