உயிரியல்-தாவரவியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தை அடையாளம் காணல் | 10th Science : Bio-Zoology Practicals
மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தை அடையாளம் காணல்
மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தினை உற்று நோக்கி, படம் வரைந்து, பாகங்களைக் குறித்து அதன் பல்வறுே பகுதிகளைக் குறிப்பிடுதல்.
மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றத்தின் மாதிரி
கொடுக்கப்பட்டுள்ள மாதிரி மனித மூளையின் நீள்வெட்டுத் தோற்றம் என அடையாளம் காணப்பட்டது.
1. மனித மூளை கபாலக் குழியினுள் அமைந்துள்ளது.
2. இது உடல் இயக்கங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மையமாக உள்ளது.

3. இது டியூராமேட்டர், அரக்னாய்டு மற்றும் பயாமேட்டர் ஆகிய மூன்று இணைப்புத் திசு படலம் அல்லது மெனின்ஜஸால் சூழப்பட்டுள்ளது.
4. மனித மூளையானது முன் மூளை, நடு மூளை மற்றும் பின் மூளை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.