Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

பொருளியல் - தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | 10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu

10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை" என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

 

கற்றலின் நோக்கங்கள்

தமிழ்நாட்டின் தொழில்துறை தொகுப்புகள் முன்னேற்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளுதல்

தமிழ்நாடு அரசின் கொள்கைகள் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அறிந்துகொள்ளுதல்

அரசின் கொள்கைகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்

தொழில் முனைவோரின் பங்கினைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

 

அறிமுகம்

பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் தொழிற்சாலை" என்று அழைக்கப்படுகிறது. நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும். தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் தன்மை, தொழில் தொகுப்புகளின் முக்கியத்துவம் மற்றும் தமிழ்நாட்டில் தொழில் தொகுப்புகள் எவ்வாறு முன்னேறின என்பதையும் தொழில்களை மேம்படுத்துவதில் அரசு எடுக்கும் முயற்சிகளையும் அதன் பங்கினைப் பற்றியும் இப்பாடப்பகுதியில் நாம் அறிந்து கொள்வோம். 




10வது சமூக அறிவியல் : பொருளியல் : அலகு - 5 : தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்