Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | குறுக்கீட்டு விளைவு: கட்டவேறுபாடு மற்றும் பாதைவேறுபாடு

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்

குறுக்கீட்டு விளைவு: கட்டவேறுபாடு மற்றும் பாதைவேறுபாடு

அதிர்வு ஒன்றின் கோணநிலைக்குக் கட்டம் (Phase) என்று பெயர். அலை பரவும்போது, அலையில் உள்ள அதிர்வின் கட்டநிலைக்கும், அலை கடந்து சென்ற பாதைக்குமிடையே ஒரு தொடர்பு உள்ளது.
இரண்டு ஒளி அலைகள் கூடுவதால் அல்லது அவ்வொளி அலைகள் ஒன்றின் மீது மற்றொன்று மேற்பொருந்துவதால்  சில புள்ளிகளில் ஒளிச்செறிவு அதிகரிக்கும், வேறுசில புள்ளிகளில் ஒளிச்செறிவு குறையும் நிகழ்வுக்கு ஒளியின் குறுக்கீட்டு விளைவு என்று பெயர்.

கட்டவேறுபாடு மற்றும் பாதைவேறுபாடு (Phase difference and Path difference)

அதிர்வு ஒன்றின் கோணநிலைக்குக் கட்டம் (Phase) என்று பெயர். அலை பரவும்போது, அலையில் உள்ள அதிர்வின் கட்டநிலைக்கும், அலை கடந்து சென்ற பாதைக்குமிடையே ஒரு தொடர்பு உள்ளது. அலை ஒன்றின் கட்ட நிலையை, அவ்வலை கடந்து சென்ற பாதையின் அடிப்படையில் விவரிக்க இயலும். இதே போன்று அலை கடந்து சென்ற பாதையை, அவ்வலையின் கட்டநிலையின் அடிப்படையிலும் விவரிக்கலாம். அலை ஒன்றின் பாதை படம் 6.53 இல் காட்டப்பட்டுள்ளது. ஓர் அலைநீளம் λ விற்குச் சமமான கட்டம் 27 ஆகும். கட்டவேறுபாட்டிற்குச் சமமான பாதை வேறுபாடு (δ) பின்வருமாறு


ஆக்கக் குறுக்கீட்டு விளைவிற்கு , கட்டவேறுபாடு Ø = 0, 2π, 4π . . . எனவே, பாதைவேறுபாடு δ = 0, λ, 2λ . . . பொதுவாக அலைநீளத்தின் முழு எண் மடங்காக இருக்கும்.


அழிவுக் குறுக்கீட்டு விளைவிற்குக் கட்ட வேறுபாடு Ø = π, 3π, 5π . . . எனவே, பாதை வேறுபாடு

δ = λ/2, 3λ/2………………..

பொதுவாக அரை அலைநீளத்தின் முழு எண் மடங்காக இருக்கும்.


 

எடுத்துக்காட்டு 6.27

450 nm அலைநீளமுடைய ஒளி ஒன்றின் பாதை வேறுபாடு 3 mm எனில், அதற்குச் சமமான கட்ட வேறுபாட்டைக் காண்க.

தீர்வு

அலைநீளம், λ = 450 nm = 450X10-9m

பாதை வேறுபாடு, δ =3mm = 3x10-3m

கட்டவேறுபாட்டிற்கும், பாதைவேறுபாட்டிற்கும் உள்ள தொடர்பு, Ø = 2 π/λ x δ

மதிப்புகளை பிரதியிடும் போது,

12 வது இயற்பியல் :அலகு 7 : அலை ஒளியியல்