Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | மரபுரிமம் - ஓர் அறிமுகம்

கணினி அறிவியல் - மரபுரிமம் - ஓர் அறிமுகம் | 11th Computer Science : Chapter 16 : Inheritance

11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்

மரபுரிமம் - ஓர் அறிமுகம்

ஒரு பொருள் நோக்கு நிரலாக்கத்தின் மிக முக்கிய பண்புகூறுகளில் மரபுரிமம் ஒன்றாகும்.

மரபுரிமம் (INHERITANCE)


கற்றலின் நோக்கங்கள் 


இந்த பாடப்பகுதியை கற்ற பின் மாணவர் அறிந்துகொள்வது. 

• மரபுரிமத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல். 

• மரபுரிமத்தை பயன்படுத்தி C++ நிரல்களை உருவாக்குதல். 

• மரபுரிமத்தின் கருத்துருக்களைக் கொண்டு நிரல்களை இயக்குதல் மற்றும் பிழைத் திருத்தம் செய்தல். 


மரபுரிமம் - ஓர் அறிமுகம். 


ஒரு பொருள் நோக்கு நிரலாக்கத்தின் மிக முக்கிய பண்புகூறுகளில் மரபுரிமம் ஒன்றாகும். பொருள் நோக்கு நிரலாக்கத்தில் மரபுரிமம், அடிப்படை இனக்குழுக்களின் பண்புகூறுகளை ஈட்டிக் கொள்ள புதிய இனக்குழுவிற்கும், அதனுடைய பொருள்களுக்கும் வழிவகை செய்கிறது. 

மரபுரிமத்தினை செயல்படுத்த அடிப்படையாக உள்ள இனக்குழுவை, மீ இனக்குழு அல்லது அடிப்படை இனக்குழு என்கிறோம். மீ இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படும் இனக்குழு துணை இனக்குழு அல்லது தருவிக்கப்பட்ட இனக்குழு எனப்படுகிறது.



11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்