Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | கணினி உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 5 | 4 ஆம் வகுப்பு தமிழ் - கணினி உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Tamil : Term 3 Chapter 5 : Kanini ulagam

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : கணினி உலகம்

கணினி உலகம்: கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : கணினி உலகம்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

வாங்க பேசலாம்


கணினியின் திரைபோன்று செய்து கணினியைப் பற்றிப்பேசுக.

விடை

கணினி நம் உலகைச் சுருக்கி உள்ளங்கையில் கொடுத்துவிட்டது. கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் இடையிலான பரிமாற்றத்தின் மூலம் இயங்குகிறது.

கணினியின் உள்ளீடு , வெளியீடு கருவிகள் உள்ளன. விசைப்பலகை, சுட்டி போன்றவை உள்ளீட்டுக் கருவிகள். காட்சித்திரை, கணினி அச்சுப்பொறி போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.

நாம் கணினிக்குக் கொடுக்கும் தகவல்தாம் தரவுகள் (Data). தரவுகள் பதிவு செய்வதைப் பதிவேற்றம் எனவும் தகவல் பெறுவதைப் பதிவிறக்கம் எனவும் அழைக்கிறோம்

கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது. கணினிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்ய மின்னஞ்சல் பயன்படுகிறது.

இப்போது புலனம், முகநூல் சுட்டுரை ஆகியவற்றின் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இவற்றை நாம் ஆக்கப் பயன்களுக்கு மட்டும் செயல்படுத்துவோம்.

 

சிந்திக்கலாமா!


அழகன், புத்தகத்தில் மட்டுமே படிக்கமுடியும் என்கிறான். அவன் நண்பனோ கணினியிலும் படிக்கலாம் என்கிறான். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

விடை

அழகன் புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும் என்று கூறுவது தவறான கூற்றாகும். அவன் நண்பன் கணினியிலும் படிக்கலாம் என்று கூறுவது சரியானதாகும்.

புத்தகத்தில் படிக்கலாம், ஆனால் புத்தகத்தில் மட்டுமே படிக்கமுடியும் என்று கூறவியலாது. ஏனெனில் கணினியின் மூலமாகவும் படிக்கலாம்.

கணினி நமக்குத் தேவையான அனைத்து கருத்துகளையும் நொடியில் தேடித் தந்து விடுகிறது. அதனால் கணினியில் படிப்பதும் எளிதானது என்பது என் கருத்து.

 


படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி

அ) தொலைக்காட்சி

ஆ) கணினி

இ) கைப்பேசி

) மடிக்கணினி

[விடை : ஆ) கணினி]

 

2. இப்போதெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இப்போது + எல்லாம்

ஆ) இப்போ + எல்லாம்

இ) இப்போதே + எல்லாம்

ஈ) இப்போ + வெல்லாம்

[விடை : அ) இப்போது + எல்லாம்]

 

3. நினைவகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதும் முறை

அ) நினை + வகம்

ஆ) நினை + அகம்

இ) நினைவு + வகம்

ஈ) நினைவு + அகம்

[விடை : ஈ) நினைவு + அகம்]

 

4. மின் + அஞ்சல் - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மின்அஞ்சல்

ஆ) மின்னஞ்சல்

இ) மினஅஞ்சல்

) மினஞ்சல்

[விடை : ஆ) மின்னஞ்சல்]

 

5. பதிவேற்றம் - இச்சொல்லின் பொருள்

அ) தகவல் ஆராய்தல்

ஆ) தகவல் வரிசைப்படுத்துதல்

இ) தகவல் பதிவுசெய்தல்

ஈ) தகவல் பெறுதல்

[விடை : ஈ) தகவல் பெறுதல்]

 

வினாக்களுக்கு விடையளிக்க.

1. சென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் யாவை?

விடை

அடுக்குமாடிக் கட்டங்கள், மிகப்பெரிய சாலை, மெரினா கடற்கரை, விமான நிலையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உயிர்க்காட்சிச் சாலை, பொழுதுபோக்கு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஆகியவ ைசென்னையில் பூவிழி கண்டுகளித்த இடங்கள் ஆகும்.

 

2. கணினியின் முதன்மைப் பகுதிகளை எழுதுக.

விடை

கணினியின் முதன்மைப் பகுதிகள் :

மையச் செயல்பாட்டுப்பகுதி (CPU)

கட்டுப்பாட்டகம் (Control Unit)

நினைவகம் (Memory)

உள்ளீடு மற்றும் வெளியீடு (Input and output)

 

3. இணையம் என்றால் என்ன?

விடை

கணினிகளின் தொடர்ச்சியான வலை அமைப்புகள் சேர்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் எனப்படுகிறது.

 

4. மின்னஞ்சல் எதற்குப் பயன்படுகிறது?

விடை

கணினிகளுக்கு இடையே இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பரிமாற்றமே மின்னஞ்சல். இது தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுகிறது.

 

குறிப்புகளைப் படித்துச் சொற்களைத் தேர்ந்தெடுப்போமா?


காட்சிகளைக் காண்பது - திரை

செய்தியைக் குறிக்கும் வேறு பெயர் - தரவு

படங்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது - புலனம்

கணினியின் தொடர்ச்சியான வலை அமைப்பு – வலைத்தளம்

தகவல்களைப் பதிவு செய்தல் - பதிவேற்றம்

 


மொழியோடு விளையாடு


 

கை என்னும் சொல்லை முதலெழுத்தாகக் கொண்டு பல சொற்களை உருவாக்கலாமா?


கைத்தடி, கையுறை

 

செயல் திட்டம்

கணினியில் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.

நாளிதழ், வார இதழ்களில் வெளியாகும் கணினி பற்றிய செய்திகளைப் படங்களுடன் உன் குறிப்பேட்டில் ஒட்டி மகிழ்க.

 

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிக் கடிதத்தை முழுமையாக்குவோம்


திருநெல்வேலி

15-1-2020

அன்புள்ள அத்தை,

நாங்கள் அனைவரும் நலம் அதுபோல உங்கள் அனைவரின் நலம் அறிய ஆவல். அடுத்த வாரம் எங்கள் ஊரில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. அதில் பல்வேறு புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படும். அறிவு  வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு நூல்களை ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். கண்காட்சியில் கலந்து கொள்ள கதிரையும் கோமதியையும் அனுப்பினால் நாங்கள் அனைவரும்  சேர்ந்து சென்று பார்த்து மகிழ்வோம். பல புத்தகங்களை வாங்கிப் பயன் பெறுவோம்.

எனவே அவர்கள் இருவரை யும் அனுப்பி வைக்குமாறு அன்புடன்  வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள

தமிழ்

உள்நாட்டு அஞ்சல் அட்டை

பெறுநர் முகவரி

மு. முத்து

எண். 15, கம்பர் தெரு,

பிள்ளையார் கோவில் தெரு,

அமைந்தகரை

சென்னை - 600029

 

அனுப்புநர் முகவரி

ப. தமிழ்

எண், 15, அண்ணா தெரு

திருநெல்வேலி

அஞ்சல் குறியீட்டு எண்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 5 : கணினி உலகம்