Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | ஒளி எதிரொளிப்பு விதிகள்

ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - ஒளி எதிரொளிப்பு விதிகள் | 7th Science : Term 3 Unit 1 : Light

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல்

ஒளி எதிரொளிப்பு விதிகள்

1. படுகோணமும் (i), எதிரொளிப்புக் கோணமும் (r) சமம் i = r 2. படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்புக்கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்

ஒளி எதிரொளிப்பு விதிகள்

1. படுகோணமும் (i), எதிரொளிப்புக் கோணமும் (r) சமம்

i = r

2. படுகதிர், குத்துக்கோடு மற்றும் எதிரொளிப்புக்கதிர் ஆகியவை ஒரே தளத்தில் அமையும்


எடுத்துக்காட்டு 1

படத்தில், படுகதிர் AB, 27° கோணத்தை குத்துக்கோட்டுடன் ஏற்படுத்துகிறது. எனில், எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு என்ன?


தீர்வு 

படுகோணம் (i) = 27° 

எதிரொளிப்பு விதியின் படி, 

படுகோணம் = எதிரொளிப்புக்கோணம்

எனவே எதிரொளிப்புக்கோணம் (r)= 27°


எடுத்துக்காட்டு 2.

ஓர் ஒளிக்கதிர் எதிரொளிப்புத் தளத்தில் பட்டு 43° கோணத்தைக் கிடைத்தளத்துடன் ஏற்படுத்துகிறது. எனில், 

i. படுகோணத்தின் மதிப்பு என்ன?

ii. எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு என்ன? 

iii. படுகதிருக்கும், எதிரொளிப்புக்கதிருக்கும்இடையே உள்ள கோணம் என்ன? 

iv. எதிரொளிப்புக்கதிருக்கும், எதிரொளிக்கும் தளத்திற்கும் இடையே உள்ள கோணம் என்ன ? 



தீர்வு .

i. படுகோணம் =: i = 90° - 43° = 47°

ii. எதிரொளிப்புக் கோணம் = r = i = 47°

iii. i + r = 47° + 47° = 94°

iv. x  = 90° - r = 90° - 47° = 43°


செயல்பாடு : 3 

பெரிஸ்கோப் ஒன்றை உருவாக்குவோமா!

பெரிஸ்கோப் ஒன்றினை உருவாக்க, காலியான ஊதுவத்தி பெட்டி மற்றும் இரு சமதள ஆடிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள். படத்தில் காட்டியுள்ளவாறு இரு சமதள


ஆடிகளையும், ஒன்றுக்கொன்று 45° கோணத்தில் அமைக்கவும்

மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளவாறு, தூரத்தில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் குழாயின் பகுதி-1 வழியே உள்ளே சென்று கண்ணாடி 2 இல் விழுகிறது. படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமம் என்பதால் எதிரொளிப்புக் கதிர்கள் குழாயின் வழியே கீழ் நோக்கிச் சென்று, கண்ணாடி 3இல் விழுந்து மீண்டும் எதிரொளிக்கப்படுகிறது. எதிரொளிக்கப்படும் கதிர்கள், குழாயிலிருந்து வெளியே சென்று நம் கண்களை வந்து அடைகின்றன. பெரிஸ்கோப் எதிரொளிப்பு விதியின்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொண்டாயா?


7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 1 : ஒளியியல்