Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | உயிரி உலகம் : முக்கியமான கேள்விகள்

தாவரவியல் - உயிரி உலகம் : முக்கியமான கேள்விகள் | 11th Botany : Chapter 1 : Living World

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

உயிரி உலகம் : முக்கியமான கேள்விகள்

மதிப்பீடு, பதில்களுடன் கூடிய பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள், கேள்விக்கு பதிலளிக்கவும்

உலகின் பன்முகத்தன்மை

உயிரி உலகம்


மதிப்பீடு

 

1. பின்வருவனவற்றுள் வைரஸ்களைப் பற்றிய சரியான கூற்று எது?

அ) வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுள்ளன

ஆ) நிலைமாறும் ஒட்டுண்ணிகளாகும்

இ) DNA அல்லது RNA - வை கொண்டுள்ளன.

ஈ) நொதிகள் காணப்படுகின்றன

 

2. கிராம் நேர் பாக்டீரியங்களைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.

அ) டெக்காயிக் அமிலம் காணப்படுவதில்லை

ஆ) செல்சுவரில் அதிகளவு பெப்டிடோ கிளைக்கான் உள்ளது.

இ) செல்சுவர் ஓரடுக்கால் ஆனது.

ஈ) லிப்போபாலிசாக்கரைட்கள் கொண்ட செல்சுவர்

 

3. ஆர்க்கிபாக்டீரியம் எது?

(அ) அசட்டோபாக்டர்

(ஆ) எர்வினீயா

(இ) டிரிப்போனிமா

(ஈ) மெத்தனோ பாக்டீரியம்

 

4. நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது?

அ) நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.

ஆ) செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது

இ) உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை

ஈ) ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.

 

5. சரியாகப் பொருந்திய இணையைக் கண்டறிக.

அ) ஆக்டீனோமைசீட்கள் - தாமதித்த வெப்பு நோய்

ஆ) மைக்கோ பிளாஸ்மா - கழலைத் தாடை நோய்

இ) பாக்டீரியங்கள் - நுனிக்கழலை நோய்

ஈ) பூஞ்சைகள் - சந்தனக் கூர்நுனி நோய்


6. ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்துக

7. மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக.

8. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?

9. ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.

10. லைக்கென்களின் பொதுப்பண்புகளை எழுதுக.

11. அகாரிகஸ் வாழ்க்கைச் சுழற்சியின் உருவரை தருக.

12. சிறு காம்பு (Sterigma) என்றால் என்ன?

13. அகாரிகஸில் காணப்படும் மைசீலியங்களின் வகைகளைக் குறிப்பிடுக.

14. ஆய்டியவித்து மற்றும் கிளாமிட வித்து வேறுபடுத்துக.

15. மத்தளத் துளையுடைய தடுப்புச்சுவர் கொண்ட பூஞ்சை தொகுப்பு யாது?

16. பூஞ்சைகளால் தாவரங்களில் ஏற்படும் நோய்களைக் குறிப்பிடுக.

17. பூஞ்சைவேரிகள் உருவாக உதவும் இரண்டு பூஞ்சைகளுக்கு எடுத்துக்காட்டு தருக.

18. கிராம் நேர், கிராம் எதிர் பாக்டீரியங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைத் தருக.

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்