Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | தாவர உலகம் - தாவர செயலியல்

அறிமுகம் - தாவர உலகம் - தாவர செயலியல் | 9th Science : Living World of Plants - Plant Physiology

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல்

தாவர உலகம் - தாவர செயலியல்

விலங்குகள் தங்கள் உணவு, உறைவிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்காக நகர்கின்றன. தாவரங்கள் அவ்வாறு நகர்கின்றனவா?

அலகு 19

தாவர உலகம் - தாவர செயலியல்


 

கற்றல் நோக்கங்கள்   

இப்பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன:

தாவரங்களும் தன்னிச்சையான அசைவுகளைக் கொண்டிருக்கின்றன என அறிதல்.

தாவரங்களில் உள்ள பல்வேறு அசைவுகளைப் புரிந்து கொள்ளல்.

திசை சார் மற்றும் திசை சாரா அசைவுகளை வேறுபடுத்துதல்.

 நீராவிப் போக்கு பற்றிய அறிவைப் பெறுதல்.

ஒளிச்சேர்க்கையின் மூலமாக தாவரங்கள் உணவை உற்பத்தி செய்கின்றன என புரிதல்.

நீராவிப் போக்கின் செயலை அறிதல்.

 

அறிமுகம்

விலங்குகள் தங்கள் உணவு, உறைவிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்காக நகர்கின்றன. தாவரங்கள் அவ்வாறு நகர்கின்றனவா? . தொட்டாச் சிணுங்கி (மைமோஸா புடிகா) செடியைத் தொடும் பொழுது அதன் இலைகள் சுருங்குகின்றன; அதே போன்று சூரியகாந்தி (ஹீலியாந்தஸ் அன்னுவஸ்) தாவரத் தண்டின் முனையானது உதயம் முதல் அஸ்தமனம் வரை சூரியன் இருக்கும் திசையை நோக்கி நகர்கின்றது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் வெளிப்புறக் காரணிகளால் தூண்டப்படுகின்றன. விலங்குகளைப் போல் தாவரங்களால் தன்னிச்சையாக ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்கு நகர இயலாது. ஆனால் தாவரங்கள் சூரிய ஒளி, நீர் மற்றும் ஊட்டப் பொருள் ஆகியவற்றை அடைய தனது உடல் பாகங்களை பல்வேறு அசைவுகளுக்கு உட்படுத்துகின்றன. தாவரங்கள் ஒளி, புவி ஈர்ப்பு விசை, மற்றும் வெப்பம் போன்ற புறத் தூண்டல்களால் உணர்வூட்டப்படுகின்றன. இந்த பாடத்தில் தாவரங்களின் இயக்கம், ஒளிச்சேர்க்கை மற்றும் கடத்தும் பண்பு பற்றி படிக்க இருக்கிறோம்.


9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 19 : தாவர உலகம் - தாவர செயலியல்