Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | காந்தத் துருவங்கள்

பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காந்தத் துருவங்கள் | 6th Science : Term 3 Unit 1 : Magnetism

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்

காந்தத் துருவங்கள்

இரும்புத்துகள்களை ஒரு காகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். ஒரு சட்டகாந்தத்தை அதன் மேல் கிடையாக வைத்து, சிலமுறை இரும்புத்துகள்களுக்குள் புரட்டவும். தற்போது சட்டகாந்தத்தை எடுத்துப்பாருங்கள்.

காந்தத் துருவங்கள்

இரும்புத்துகள்களை ஒரு காகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். ஒரு சட்டகாந்தத்தை அதன் மேல் கிடையாக வைத்து, சிலமுறை இரும்புத்துகள்களுக்குள் புரட்டவும். தற்போது சட்டகாந்தத்தை எடுத்துப்பாருங்கள்.

என்ன பார்க்கிறீர்கள்? சட்டகாந்தத்தின் எந்தப்பகுதியில் இரும்புத்துகள்கள் அதிகம் ஒட்டிக் கொண்டுள்ளன?

-----------------------------------------------------------------------

சட்டகாந்தத்தின் எந்தப் பகுதியில் இரும்புத்துகள்கள் மிகக் குறைவாக

 

ஒட்டியுள்ளன அல்லது ஒட்டவேயில்லை?


காந்தத்தின் எந்தப் பகுதியில் இரும்புத்துகள்கள் அதிகம் ஒட்டியுள்ளனவோ அப்பகுதியை காந்தத்தின் துருவங்கள் என்கிறோம்.

 


காந்தங்களைக் கொண்டு செய்யப்படும் பரிசோதனைகளுக்கு உங்களுக்கு இரும்புத்துகள்கள் அதிகம் தேவைப்படும். ஒரு காந்தத்தை மணலில் நன்கு தோய்த்து எடுத்தால் இரும்புத்துகள்கள் காந்தத்தோடு ஒட்டிக்கொண்டு வருவதை நீங்கள் பார்க்கலாம். மணல் கிடைக்கவில்லையெனில்  களிமண் போன்றவற்றிலும் முயற்சிக்கலாம்.

இரும்புத்துகள்கள் இல்லையெனில் சிறிய இரும்புத்துண்டுகளைப் பயன்படுத்தலாம். அதனைச் சிறிது சிறிதாக சேகரித்து சோதனைக்குப் பயன்படுத்தலாம்.

காந்தத்தின் ஈர்ப்புவிசை காந்தத்தின் இரு முனைகளிலும் அதிகமாக இருக்கிறது, இந்த இரு முனைகளையும் காந்தத்தின் துருவங்கள் என அழைக்கிறோம்.

உங்களிடம் லாட் வடிவ காந்தமோ, அல்லது பிற வடிவிலான காந்தங்களோ இருப்பின் அவற்றின் துருவங்களையும் இந்த செயல்பாட்டின் மூலம் கண்டறிய முயலவும்.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்