பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காந்த திசைகாட்டும் கருவி | 6th Science : Term 3 Unit 1 : Magnetism
காந்த திசைகாட்டும் கருவி
காந்த திசையறிய உதவும் ஒரு காந்த ஊசிப்பெட்டி ஆகும். தடையின்றி
சுழலும் வகையில் ஒரு காந்த ஊசி இதன் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. காந்த ஊசியின்
வட முனை குறியிடப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் மற்றும் விமானங்களில் காந்த திசைகாட்டும் கருவி பொதுவாக
பயன்படுத்தப்படுகிறது. மலையேறுபவர்கள் தாங்கள் திசைமாறி வேறு இடத்திற்குச் செல்லாமலிருக்க
இதை அவசியம் எடுத்துச் செல்கின்றனர்.
காந்த
ஊசியைப் பயன்படுத்தி உங்களால் மேற்கு திசையைக் கண்டறிய இயலுமா? காந்த
திசைகாட்டும் கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என உங்கள் ஆசிரியரிடம் கேட்டு அறிந்து
கொள்ளவும்.