பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காந்தவியல் | 6th Science : Term 3 Unit 1 : Magnetism

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்

காந்தவியல்

கற்றல் நோக்கங்கள் ❖ காந்தங்கள் கண்டறியப்பட்ட வரலாற்றை அறிதல் ❖ காந்தத் தன்மையுடைய மற்றும் காந்தத் தன்மையற்ற பொருள்களை அடையாளம் காணுதல் ❖ காந்தத்தின் வட மற்றும் தென் துருவங்களை வேறுபடுத்துதல் ❖ காந்தத்தின் பண்புகளை அட்டவணைப்படுத்துதல் ❖ மின்காந்தத் தொடர்வண்டி இயங்கும் விதத்தை விளக்குதல்

அலகு 1

காந்தவியல்




 

கற்றல் நோக்கங்கள்

காந்தங்கள் கண்டறியப்பட்ட வரலாற்றை அறிதல்

காந்தத் தன்மையுடைய மற்றும் காந்தத் தன்மையற்ற பொருள்களை அடையாளம் காணுதல்

காந்தத்தின் வட மற்றும் தென் துருவங்களை வேறுபடுத்துதல்

காந்தத்தின் பண்புகளை அட்டவணைப்படுத்துதல்

மின்காந்தத் தொடர்வண்டி இயங்கும் விதத்தை விளக்குதல்

 

அறிமுகம்

நீங்கள் காந்தங்களைப் பார்த்திருப்பீர்கள். காந்தங்களை வைத்து மகிழ்ந்திருக்கிறீர்களா?

ஒரு எவர்சில்வர் டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். நூல் கோர்க்கப்பட்ட தையல் ஊசி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் காட்டியவாறு நூலினைக் கையால் பிடித்துக் கொண்டு, டம்ளரை ஊசிக்கு மேல்  வைத்து, மெதுவாக மேலே உயர்த்தவும். என்ன நிகழ்கிறது?


________________________________________

இதே நிகழ்வை உங்கள் ஆசிரியர் செய்வதை உற்று நோக்குங்கள். என்ன நிகழ்கிறது?

________________________________________

ஊசி மேலெழுவதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? ஏன் இவ்வாறு நிகழ்கிறது என ஊகித்து எழுதுங்கள்.

________________________________________

________________________________________


6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 1 : காந்தவியல்