Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | மலையும் எதிரொலியும்

பருவம் 3 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ் - மலையும் எதிரொலியும் | 4th Tamil : Term 3 Chapter 6 : Malayum ethiroliyum

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : மலையும் எதிரொலியும்

மலையும் எதிரொலியும்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : மலையும் எதிரொலியும்

6. மலையும் எதிரொலியும்


தந்தையும் மகனும் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று மகன் கீழே விழுந்து அடிபட்டு, " ஆஆஆஆஆஆஆ!!!" என்று கத்தினான்.

என்ன ஆச்சரியம்! அவனுடைய சத்தம் அவனுக்கே திருப்பிக் கேட்டது, ஆஆஆஆஆஆஆ!!!"

அவன் ஆவலுடன் "யார் நீ" என்று கேட்டான். திரும்ப அவனுக்கு "யார் நீ" என்ற சத்தம் கேட்டது.

"உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது" என்று மலையைப் பார்த்து அவன் கத்தினான்.

உடனே மலையும் "உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது" என்று பதிலளித்தது.

இதைக் கேட்டதும் அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. "உன்னால் நேரில் வர முடியாதா?" என்று திட்டினான்.

அவனுக்கு மறுபடியும் அதே பதிலே வந்தது. "உன்னால் நேரில் வர முடியாதா?" அவன் தன்னுடைய தந்தையைப் பார்த்து "அப்பா இங்கு என்ன நடக்கிறது?" என்று கேட்டான்.

அவனுடைய அப்பா சிரித்துக் கொண்டே, "மகனே!கவனமாகக் கேள்!" என்றார்.


இப்பொழுது அவர் மலையைப் பார்த்து "நீ ஒரு வெற்றி வீரன் என்றார். அந்தச் சத்தம் "நீ ஒரு வெற்றி வீரன்" என்று திரும்பிச் சொன்னது.

அந்தச் சிறுவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆனால், அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுடைய அப்பா, இதை எல்லாரும் எதிரொலி என்று கூறுவர். ஆனால், வாழ்க்கைக்கான தத்துவம் இது. நாம் தருவதை எல்லாம் அது நமக்குத் திருப்பித் தரும், நம்முடைய வாழ்க்கை நம்முடைய செயல்பாட்டின் எதிரொலிதான். அடுத்தவர் உன்மீது அன்பு செலுத்த வேண்டும் என விரும்பினால் அடுத்தவர் மீது நீ அன்பு செலுத்த வேண்டும்.

நீ மற்றவர்களிடம் அதிகமான திறமையை அதிகமான திறமையை எதிர்பார்த்தால், முதலில் உன்னுடைய திறமையை அதிகரித்துக் கொள்.

நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதையே வாழ்க்கையும் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது.

உன்னுடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று அது உன்னுடைய எதிரொலிதான் என்று கூறி முடித்தார் தந்தை.

நீதி: நாம் செய்கின்ற செயல்களே நன்மையையும் தீமையையும் விளைவிக்கின்றன.

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 6 : மலையும் எதிரொலியும்