நவீன
விவசாய நடைமுறைகள் மற்றும் பயிர் மேம்பாடு
தாவரங்களைப் பயிரிடுவதில்
மேற்கொள்ளப்படும் நவீன விவசாய செயல்பாடுகளே மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள்
எனப்படுகின்றன. இதில் மண்ணைப் பண்படுத்துதல், விதைத்தல், இயற்கை உரங்கள்
மற்றும் செயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், சரியான பாசனம்,
பூச்சிகள் மற்றும் களைகளிலிருந்து பாதுகாத்தல், அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் சேமிப்பு
ஆகியவை அடங்கும்.
அதிக மகசூல், உயர்ந்த தரம்,
நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் குறுகிய சாகுபடி காலம் போன்ற
பண்புகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட பயிர் வகைகளை உருவாக்குவதே பயிர் மேம்பாட்டின்
குறிக்கோள் ஆகும்.