Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | மைக்கோபிளாஸ்மா அல்லது மொல்லிகியுட்கள்

தாவரவியல் - மைக்கோபிளாஸ்மா அல்லது மொல்லிகியுட்கள் | 11th Botany : Chapter 1 : Living World

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்

மைக்கோபிளாஸ்மா அல்லது மொல்லிகியுட்கள்

மைக்கோபிளாஸ்மா அல்லது மொல்லிகியுட்கள் மிகச் சிறிய (0.1 – 0.5 μm) பல்வகை உருவமுடைய கிராம் எதிர் நுண்ணுயிரிகளாகும்.

மைக்கோபிளாஸ்மா (Mycoplasma)

மைக்கோபிளாஸ்மா அல்லது மொல்லிகியுட்கள் மிகச் சிறிய (0.1 – 0.5 μm) பல்வகை உருவமுடைய கிராம் எதிர் நுண்ணுயிரிகளாகும். இவைகளை முதன் முதலில் நக்கார்டும், சக ஆய்வாளர்களும் 1898-ஆம் ஆண்டு போவின் புளூரோ நிமோனியாவால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் நுரையீரல் திரவத்திலிருந்து தனிமைப்படுத்தினர். இவைகளில் செல்சுவர் காணப்படுவதில்லை, வளர் ஊடகத்தில் "பொரித்த முட்டை" (Fried Egg) போன்று காட்சியளிக்கின்றன. மேலும் உண்மையான பாக்டீரியங்களின் DNA-வை ஒப்பிடும் போது, குறைந்த குவனைன், சைட்டோசைன் பெற்றுள்ளன. இவை விலங்கு, தாவரங்களில் நோயை ஏற்படுத்துகின்றன. கத்திரித்தாவரத்தில் தோன்றும் "சிறிய இலை", லெகூம் வகை தாவரங்களில் காணப்படும் "துடைப்பம் நோய்", இலவங்கத்தில் "இலைக்கொத்து நோய்", சந்தனத்தில் "கூர்நுனி நோய்" போன்ற நோய்களைப் பல்வேறுதாவரங்களில் உண்டாக்குகின்றன. புளூரோநிமோனியா நோயினை மைக்கோபிளாஸ்மா மைக்காய்டஸ் என்ற நுண்ணுயிரி ஏற்படுத்துகிறது. மைக்கோபிளாஸ்மாவின் அமைப்பு படம் 1.17-ல் கொடுக்கப்பட்டுள்ளது.


 

 

 

11 வது தாவரவியல் : அலகு 1 : உயிரி உலகம்