அணுக்கருக்கள்
அறிமுகம்
முந்தைய பிரிவில் பல்வேறு தொடக்க நிலை அணு
மாதிரிகள், ரூதர்போடு ஆல்பா துகள் சிதறல் ஆய்வு மற்றும் போர் அணு மாதிரி ஆகியவற்றைப்
பற்றி பார்த்தோம். அணு மற்றும் அணுக்கரு ஆகியவற்றின் அமைப்பைப் புரிந்து கொள்வதற்கு
இவை பெரிதும் உதவின. இந்தப் பிரிவில் அணுக்கருவின் பண்புகள் மற்றும் அதன் வகைகளைப்
பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.