Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கருக்கவர் பொருள்கள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள்கள்

கரிம வேதி வினைகள் - கருக்கவர் பொருள்கள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள்கள் | 11th Chemistry : UNIT 12 : Basic concepts of organic reactions

11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்

கருக்கவர் பொருள்கள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள்கள்

நேர்மின் தன்மையுடைய மையத்தின் மீது அதிக நாட்டமுடைய வினைக் காரணிகள் கருக்கவர் பொருள்கள் (nucleophiles) எனப்படும்.

கருக்கவர் பொருள்கள் மற்றும் எலக்ட்ரான் கவர் பொருள்கள்

நேர்மின் தன்மையுடைய மையத்தின் மீது அதிக நாட்டமுடைய வினைக் காரணிகள் கருக்கவர் பொருள்கள் (nucleophiles) எனப்படும். இக் கருக்கவர் பொருள்கள் பிணைப்பில் ஈடுபடா எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள அணுக்களைப் பெற்றிருப்பதால் நேர்மின் மையம் காணப்படும் அணுவின் மீது நாட்டத்தினைப் பெற்றிருப்பதுடன் அதனுடன் எலக்ட்ரானைப் பங்கீடு செய்து சகப்பிணைப்பினை உருவாக்கி நிலைப்புத்தன்மையைப் பெறுகின்றன. மேலும் இவைகள் வழக்கமாக எதிர் மின் சுமையுடைய அயனிகளாகவோ அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனித்த எலக்ட்ரான் இரட்டையினைக் கொண்டுள்ள நடுநிலை மூலக்கூறுகளாகவோ இருக்கும். அனைத்து லூயி காரங்களும் கருக்கவர் பொருளாக செயல்படும் தன்மையுடையவை.


எலக்ட்ரான் அடர்வுமிகு மையத்தினை நோக்கியோ அல்லது எதிர் மின் சுமையை நோக்கியோ கவரப்படும் வினைப்பொருள்கள் எலக்ட்ரான்கவர் பொருள்கள் எனப்படும். இவைகள் நேர்மின்சுமையுடைய அயனிகளாகவோ அல்லது எலக்ட்ரான் பற்றாக்குறை உடைய நடுநிலை மூலக்கூறுகளாகவோ இருக்கலாம். அனைத்து லூயி அமிலங்களும் எலக்ட்ரான் கவர்பொருளாக செயல்படும் தன்மையுடையவை. SnCl4 போன்ற மற்றவைகளிலிருந்து பெறும் எலக்ட்ரானை ஏற்கும் வகையில் காலியான d-ஆர்பிட்டால்களைக் கொண்டுள்ள நடுநிலை மூலக் கூறுகளும் எலக்ட்ரான் கவர் பொருளாக செயல்படும் தன்மையுடையவை


உங்களுக்குத் தெரியுமா?

X-கதிர், சிகரெட் புகை, தொழிற்சாலை வேதிப் பொருள்கள் மற்றும் காற்று மாசுபாடு போன்றவற்றிற்கு உட்படும் போது மனித உடல் தனி உறுப்புகளை உருவாக்கும். இத்தகைய தனி உறுப்புகள் (free radicals) செல் சவ்வினை பாதிப்படையச் செய்வதுடன், புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பினையும் அதிகரிக்கின்றது. மேலும் இரத்த குழாய்களில் உட்புற பூச்சினை பாதிப்படையச் செய்வதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்பினை உருவாக்குகிறது. தனி உறுப்புகளின் இத்தகைய விளைவுகளுக்கு விட்டமின்களையும் தாது உப்புகளையும் பயன்படுத்தி உடலானது எதிர்வினையாற்றுகிறது. பழங்களில் எதிர் ஆக்சிஜனேற்றிகள் (antioxidants) காணப்படுகின்றன. இவைகள் தனி உறுப்புகளின் விளைவினை குறைக்கும் தன்மையுடையவை.


11 வது வேதியியல் : அலகு 12 : கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்