மூன்றாம் பருவம் அலகு 1 | 7ஆம் வகுப்பு கணக்கு - எண்ணியல் | 7th Maths : Term 3 Unit 1 : Number System

7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்

எண்ணியல்

கற்றல் நோக்கங்கள் • தசம எண்களை முழுமையாக்கத் தெரிந்து கொள்ளுதல். • தசம எண்களின் நான்கு அடிப்படை செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்.

அலகு 1

எண்ணியல்


கற்றல் நோக்கங்கள்

தசம எண்களை முழுமையாக்கத் தெரிந்து கொள்ளுதல்

தசம எண்களின் நான்கு அடிப்படை செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்.


தசம எண்கள் - மீள் பார்வை

முன் பருவத்தில் தசம எண்களைப் பற்றி நாம் கற்றறிந்தோம். கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலம் அவற்றை மீண்டும் ஒரு முறை மீள் பார்வை செய்வோம்.


இவற்றை முயல்க

1. 1/4  என்ற பின்னத்தைத் தசம எண்ணாக மாற்றுக.

தீர்வு :

1/4 = [1 × 25] / [4 × 25] = 25 / 100 = 0.25

2. 63.257 இல் 5 இன் இடமதிப்பு என்ன?

தீர்வு :

 63.257 இல் 5 இன் இடமதிப்பு நூறில் ஒன்று 

3. 75.036 இல் பத்தாம் இடத்திலுள்ள இலக்கத்தினைக் கண்டறிக.

தீர்வு : 0

4, 3.75 என்ற தசம எண்ணைப் பின்னமாக மாற்றுக.

தீர்வு :  3.75 = 375 / 100 = 15 / 4 

5. 5 1/5 என்ற கலப்பு பின்னத்தைத் தசம எண்ணாக எழுதுக.

தீர்வு : 5( 1/5) = 26 / 5 = [ 26 × 2 ] / [ 5 × 2 ] = 52 / 10 = 5.2

6. 0.567, 0.576 : இவற்றில் எது பெரிய எண்?

தீர்வு : 0.576 > 0.567

7. 3.30, 3.03 இவற்றை ஒப்பிடுக மேலும் இவற்றில் சிறிய எண்ணைக் கண்டறிக.

தீர்வு : இரண்டு எண்களிலும் முழு எண் சமம்

இப்போது 10வது இடத்தை ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு 3 > 0 உள்ளது

3.30 < 3.03 சிறிய எண் 3.03

8. சரியான குறியிடுக. (<,>,=)

  2.57 _____ 2.570

தீர்வு :  2.57 = 2.570

9. கீழ்க்காணும் தசம எண்களை ஏறுவரிசையில் எழுதுக.

   5.14, 5.41, 1.54, 1.45, 4.15, 4.51

ஏறுவரிசை : 1.45, 1.54. 4.15, 4.51, 5.14, 5.41


அறிமுகம்

மணி, காய்கறிகளை வாங்குவதற்காகக் கடைவீதிக்குச் சென்றார். கீழ்க்காணும் அட்டவணையில் உள்ளவாறு ஐந்து விதமான காய்கறிகளின் விலைப்பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.


மேற்காணும் காய்கறிகளின் விலையை மணி முழு எண்களாக மாற்ற விரும்புகிறார்

ஒவ்வொரு தசம எண்ணையும் எவ்வாறு முழுதாக்க இயலும்


7ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 1 : எண்ணியல்