Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் | உயிரியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Biology : Organ Systems in Animals

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 20 : விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 20 : விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

உயிரியல்

அலகு - 20

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்


புத்தக வினாக்கள்


I.  சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?

அ) நாவடிச் சுரப்பி

ஆ) லாக்ரிமால்

இ) கீழ்தாடைச் சுரப்பி

ஈ) மேலண்ணச் சுரப்பி

விடை:

ஆ) லாக்ரிமால்


2. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ……………………

ஆகும்.

அ) கார்போஹைட்ரேட்கள்

ஆ) புரதங்கள்

இ) கொழுப்பு

ஈ) சுக்ரோஸ்

விடை:

ஆ) புரதங்கள்


3. மூச்சுக்குழலின் துளைக்குள் உண்வானது நுழைவதைத் தடுப்பது ……………… ஆகும்.

அ) குரல்வளை மூடி

ஆ) குரல்வளை முனை

இ) கடின அண்ணம்

ஈ) மிருதுவான அண்ணம்

விடை:

அ) குரல்வளை மூடிகள்


4. பித்த நீர் ……………………  செரிக்க உதவுகிறது.

அ) புரதங்கள்

ஆ) சர்க்கரை

இ கொழுப்புகள்

ஈ) கார்போஹைட்ரேட்டுகள்

விடை:

இ) கொழுப்புகள்


5. சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு …………………. ஆகும்.

அ) குடலுறுஞ்சிகள்

ஆ) கல்லீரல்

இ) நெஃப்ரான்

ஈ) சிறுநீரகக்குழாய்

விடை:

இ) நெஃப்ரான்


6. கீழ்க்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?

அ) யூரியா

ஆ) புரதம்

இ) நீர்

ஈ) உப்பு

விடை:

ஆ) புரதம்


7. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ………………. ஆகும்.

அ) சிறுநீரகக்குழாய்

ஆ) சிறுநீர்ப்புறவழி

இ) விந்துக்குழாய்

 ஈ) விதைப்பை

விடை:

ஆ) சிறுநீர்ப்புறவழி


8. கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?

அ) அண்டம்

ஆ) கருப்பை

இ விந்தகம்

ஈ) அண்டக்குழாய்

விடை:

இ) விந்தகம்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு

1. சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ………………… ஆகும்.

விடை:

பைலோரஸ்

(குடல்வாய்)

2. உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ………………. ஆகும்.

விடை:

நாக்கு

3. கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ……………………….  ல் சேமித்து வைக்கப்படுகிறது.

விடை:

பித்தப்பை

4. உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி …………………… ஆகும்.

விடை:

சிறுகுடல்

5. மனித உடலானது …………………………. வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.

விடை:

37oC

6. பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ……………………… ஆகும்.

விடை:

கருமுட்டை

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

1. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

விடை:

தவறு

இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.


2. செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.

விடை:

சரி


3. கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.

விடை:

சரி

 

IV. பொருத்துக

1. தோல் – சிறுநீர்

2. நுரையீரல்கள் – வியர்வை

3. பெருங்குடல் - கார்பன் டை ஆக்ஸைடு

4. சிறுநீரகங்கள் - செரிக்காத உணவு

விடை:

1. தோல் – வியர்வை

2. நுரையீரல்கள் – கார்பன் டை ஆக்ஸைடு

3. பெருங்குடல் - செரிக்காத உணவு

4. சிறுநீரகங்கள் - சிறுநீர்

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 20 : விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்