Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | செயலிகளின் வரிசை

எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - செயலிகளின் வரிசை | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

செயலிகளின் வரிசை

இந்தச் செயலிகளின் வரிசை விதிகள் BIDMAS விதி எனப்படும். மேலும் BIDMAS–இல் இடதுபக்கத்திலிருந்து வலதுபக்கமாகச் செல்லுதல் வேண்டும்.

செயலிகளின் வரிசை

இந்தச் சூழ்நிலையைச் சிந்தித்துப் பார்க்க.


வள்ளியும் அவளது நான்கு தோழிகளும், கடைக்குச் சென்று ஒவ்வொருவரும் ஒரு குவளை மோர் குடித்தார்கள். 1 மோரின் விலை ₹6 என நினைத்து, வள்ளிகடைக்காரரிடம் ₹30 கொடுத்தாள். ஆனால், கடைக்காரர் மோரின் விலை ₹2 அதிகரித்துவிட்டது எனக் கூற, வள்ளி மேலும் ₹2 என, மொத்தம் ₹32 ஐக் கொடுத்தாள். ஆனால் கடைக்காரர் ₹40 ஐக் கேட்டார். இதில், யார் கூறுவது சரி?


வள்ளி கணக்கீட்டின்படி,

= (5 × 6) + 2

= 30 + 2

= 32

கடைக்காரர் கணக்கீட்டின்படி,

= 5 × (6 + 2)

= 5 × 8

= 40

கடைக்காரர் கேட்ட தொகையே சரியானது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க அடைப்புக் குறியைப் பின்வருமாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும் 5 × (6 + 2)

இந்தச் செயலிகளின் வரிசை விதிகள் BIDMAS விதி எனப்படும். மேலும் BIDMAS–இல் இடதுபக்கத்திலிருந்து வலதுபக்கமாகச் செல்லுதல் வேண்டும்.


இப்பொழுது நாம், 9 + 5 × 2 BIDMAS ஐப் பயன்படுத்தித் தீர்க்க,

9 + (5 × 2) = 9 + 10

= 19.


எடுத்துக்காட்டு 1.10 

சுருக்குக : 24 + 2 × 8 ÷ 2 – 1

தீர்வு

24 + 2 × 8 ÷ 2 – 1     (முதலில் ÷ செயல் செய்யப்பட்டது)

= 24 + 2 × 4 – 1       (இரண்டாவதாக × செயல் செய்யப்பட்டது)

= 24 + 8 –  1           (மூன்றாவதாக + செயல் செய்யப்பட்டது)

= 32 –  1                (இறுதியாகசெயல் செய்யப்பட்டது)

= 31


எடுத்துக்காட்டு 1.11

சுருக்குக : 20 + [8 × 2 + {(6 × 3) – (10 ÷ 5)}]

தீர்வு  

20 + [8 × 2 + {(6× 3) – (10 ÷ 5)}]

= 20 + [8 × 2 + {(6 × 3) – 2}]   (முதலில் ÷ செய்யப்பட்டது)

= 20+ [8 × 2 + {18 – 2}]          (இரண்டாவதாக × செயல் செய்யப்பட்டது

= 20 + [8 × 2 + 16)]              (மூன்றாவதாக { } செய்யப்பட்டது

= 20 + [16 + 16]                 (நான்காவதாக × செயல் செய்யப்பட்டது)

= 20 + 32                         (ஐந்தாவதாக [ ] செய்யப்பட்டது

= 52                               (இறுதியாக + செயல் செய்யப்பட்டது)


6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்