பயிர் பெருக்கம் - வேளாண்மையின் தோற்றம் | 12th Botany : Chapter 9 : Plant Breeding
வேளாண்மையின் தோற்றம்
மிகத் தொன்மையான வேளாண்மைக்கான பதிவை டைக்ரிஸ்
மற்றும் யுஃபரேட்ஸ் நதிப்படுகைகளுக்கு இடையேயுள்ள செழுமை பிறைப் பகுதியில் ஏறக்குறைய
12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைத் தொல்லியல் தரவுகள் மூலம் அறியலாம்.
பழைய கிரேக்க மற்றும் ரோமானிய இயற்கை வல்லுநர்களான
தியோஃபராஸ்டஸ், டையோஸ்கோரிடிஸ், மூத்த பிளனி , கேளன் ஆகியோர் பயிர் தாவரங்களின் தோற்றம்
மற்றும் வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல் குறித்த அறிவியல்பூர்வமான புரிதலுக்கு வழிகோலினர்.