ஹேலஜனின் ஆக்சைடுகள்
புளூரின் ஆக்சிஜனுடன் எளிதில் வினைபுரிந்து ஆக்சிஜன் டைபுளூரைடு (OF2) மற்றும் டைஆக்சிஜன் டைபுளூரைடு (O2F2) தருகிறது. இச்சேர்மங்களில் இது - 1 ஆக்சிஜனேற்ற நிலையைப் பெற்றுள்ளது. மற்ற ஹேலஜன்கள் ஆக்சிஜனுடன் எளிதில் வினைபுரிவதில்லை. எனினும் பின்வரும் ஆக்சைடுகளை மறைமுக முறையில் தயாரிக்கலாம். புளூரினைத் தவிர மற்ற அனைத்து ஹேலஜன்களும் நேர் ஆக்சிஜனேற்ற நிலைகளில் காணப்படுகின்றன.
அட்டவணை 3.8
