Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | பெரிய எண்களின் இடமதிப்பு

எண்கள் | பருவம் 1 அலகு 1 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பெரிய எண்களின் இடமதிப்பு | 6th Maths : Term 1 Unit 1 : Numbers

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்

பெரிய எண்களின் இடமதிப்பு

ஓர் எண்ணிலுள்ள ஒவ்வோர் இலக்கத்திற்கும் ஓர் இட மதிப்பு உண்டு. அது அந்த இலக்கத்தின் மதிப்பைத் தரும்.

4. பெரிய எண்களின் இடமதிப்பு

ஓர் எண்ணிலுள்ள ஒவ்வோர் இலக்கத்திற்கும் ஓர் இட மதிப்பு உண்டு. அது அந்த இலக்கத்தின் மதிப்பைத் தரும்.

6,76,097 என்ற எண்ணினை விரிவாக்க முறையில் எழுதுதல்:

கொடுக்கப்பட்ட எண் : 6,76,097

விரிவாக்கம்

: 6 இலட்சங்கள் + 7 பத்து ஆயிரங்கள் + 6 ஆயிரங்கள் + 0 நூறுகள் + 9 பத்துகள் + 7 ஒன்றுகள்

: 6 × 100000 + 7 × 10000 + 6 × 1000 + 0 × 100 + 9 × 10 + 7 × 1

: 600000 + 70000 +  6000 + 90 +

9847056 இன் ஒவ்வோர் இலக்கத்திற்குமான இட மதிப்பு காணுதல்:


6 இன் இடமதிப்பு = 6 ஒன்றுகள் = 6 × 1 = 6

5 இன் இடமதிப்பு = 5 பத்துகள்  = 5 × 10 = 50

0 இன் இடமதிப்பு = 0  நூறுகள் = 0 × 100 = 0

7 இன் இடமதிப்பு = 7 ஆயிரங்கள் = 7 × 1000 = 7,000

4 இன் இடமதிப்பு = 4 பத்தாயிரங்கள் = 4 × 10000 = 40,000

8 இன் இடமதிப்பு = 8 இலட்சங்கள் = 8 × 100000 = 8,00,000

9 இன் இடமதிப்பு = 9 பத்து இலட்சங்கள் = 9 × 1000000 = 90,00,000 

ஆகவே 98,47,056 என்ற எண்ணுருவானது தொண்ணூற்று எட்டு இலட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து ஐம்பத்தாறு என்பதாகும்.


இவற்றை முயல்க

1. கீழ்க்காணும் எண்ணுருக்களை விரிவாக்கம் செய்க.

(i) 2304567 

தீர்வு

விரிவாக்க வடிவம் :

2 × 1000000 + 3 × 100000 + 0 × 10000 + 4 × 1000 + 5 × 100 + 6 × 10 + 7 × 1 

படித்துக்காட்டுதல்: இருபத்து மூன்று இலட்சத்து நான்கு ஆயிரத்து ஐநூற்று அறுபத்து ஏழு.

(ii) 4509888 

தீர்வு

விரிவாக்க வடிவம் :

4 × 1000000 + 5 × 100000 + 0 × 10000 + 9 × 1000 + 8 × 100 + 8 × 10 + 8× 1 

படித்துக்காட்டுதல் : நாற்பத்து ஐந்து இலட்சத்து ஒன்பதாயிரத்து எண்ணூற்று எண்பத்து எட்டு

(iii) 9553556

தீர்வு

விரிவாக்க வடிவம் :

9 × 1000000 + 5 × 100000 + 5 × 10000 + 3 × 1000 + 5 × 100 + 5 × 10 + 6 × 1

படித்துக்காட்டுதல்: தொண்ணூற்று ஐந்து இலட்சத்து ஐம்பத்து மூன்றாயிரத்து ஐநூற்று ஐம்பத்து ஆறு

2. அடிக்கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பைக் காண்க.

 (i) 3841567

தீர்வு :

8–இன் இடமதிப்பு 8 × 1,00,000 = 8,00,000 (எட்டு இலட்சம்)

 (ii) 9443810

தீர்வு :

4–இன் இடமதிப்பு 4 × 10,000 = 40,000 (நாற்பதாயிரம்)

3. பின்வரும் எண் பெயர்களிலிருந்து, எண்ணுருக்களை எழுதி, அவ்வெண்களில் 5 இன் இடமதிப்பைக் காண்க.

(i) நாற்பத்து ஏழு இலட்சத்து முப்பத்து எட்டாயிரத்து ஐநூற்று அறுபத்து ஒன்று

தீர்வு : எண்ணுரு : 47,38,561

5–இன் இடமதிப்பு 5 × 100 = 500 (ஐநூறு)

(ii) ஒன்பது கோடியே எண்பத்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்து இருநூற்று நாற்பத்து ஒன்று

தீர்வு : எண்ணுரு: 9,82,50,241

5–இன் இடமதிப்பு 5 × 10000 = 50,000 (ஐம்பதாயிரம்)

(iii) பத்தொன்பது கோடியே ஐம்பத்து ஏழு இலட்சத்து அறுபதாயிரத்து முன்னூற்று எழுபது

தீர்வு

எண்ணுரு: 19,57,60,370 

5–இன் இடமதிப்பு 5 × 10,00,000 = 50,00,000 (ஐம்பது இலட்சம்)


எடுத்துக்காட்டு 1.3

ஓர் இலட்சத்தில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?

தீர்வு


இலட்சமானது ஆயிரத்திலிருந்து 2 இடங்கள் இடப்புறமாக உள்ளது. இது 10 × 10 = 100 முறை ஆயிரங்கள் ஆகும். எனவே, 1 இலட்சம் = 100 ஆயிரங்கள் ஆகும்.


எடுத்துக்காட்டு 1.4

ஒரு மில்லியனில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?

தீர்வு


மில்லியன் ஆயிரத்திலிருந்து 3 இடங்கள் இடப்புறமாக உள்ளது. எனவே, 1 மில்லியன் = 1000 ஆயிரங்கள் ஆகும்.


இவற்றை முயல்க 

1. 10 இலட்சத்தில் எத்தனை நூறுகள் உள்ளன?

தீர்வு:


பத்து இலட்சத்தில் 10,000 நூறுகள் உள்ளன.

2. ஒரு மில்லியனில் எத்தனை இலட்சங்கள் உள்ளன?

தீர்வு : 10 இலட்சங்கள் 

3. 10 இலட்சம் மாணவர்கள் இவ்வாண்டு பொதுத் தேர்வை எழுதுகின்றனர். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 1000 மாணவர்கள் தேர்வு எழுதினால் எத்தனைத் தேர்வு மையங்கள் தேவை?

தீர்வு : 1000 தேர்வு மையங்கள்

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 1 : எண்கள்