அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - பாரிஸ் சாந்து | 6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life
பாரிஸ் சாந்து
பாரிஸ் சாந்து ஒரு மிக நுண்ணிய வெள்ளைப் பொடியாகும் (கால்சியம்
சல்பேட் ஹெமி ஹைட்ரேட்). இதன் மூலக்கூறு வாயப்பாடு CaSO4 1/2H2O
பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம், பிரான்ஸ் நாட்டின்
தலைநகர் பாரிஸில் அதிகளவில் கிடைப்பதால் இது பாரிஸ் சாந்து என அழைக்கப்படுகிறது. ஜிப்சத்தினை
வெப்பப்படுத்தும் பொழுது, பகுதியளவு நீர்ச்சத்து வெளியேறி பாரிஸ் சாந்து தயாரிக்கப்படுகிறது.

பயன்கள்
❖ கரும்பலகையில் எழுதும்
பொருள் தயாரிக்க பயன்படுகின்றது.
❖ அறுவைச் சிகிச்சையில் எலும்பு
முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகின்றது.
❖ சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுகின்றது.
❖ கட்டுமானத்துறையில் பயன்படுகின்றது.