Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்

நினைவில் கொள்க

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க

 தாவர எண்ணெய் அல்லது விலங்குக் கொழுப்பினை அடர் ஹைடிராக்சைடு சோடியம் கரைசலுடன் சேர்த்து குளிர வைக்கும்போது சோப்பு கிடைக்கிறது.

உரங்கள் தாவர வளர்ச்சிக்கு உதவுகின்றன.

 மண்புழு உரம் ஊட்டச்சத்துமிக்கது மற்றும் நிலத்திற்கு நன்மை பயக்கக்கூடியது.

 சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை கலந்து சிமெண்ட் தயாரிக்கப்படுகின்றது.

 எலும்பு முறிவினைச் சரிசெய்யப் பாரிஸ் சாந்து பயன்படுகிறது.

நீர்த்த பீனால் சுத்தம் செய்யும் பொருளாகவும், கிருமி நாசினியாகவும் மற்றும் வாய்க்கொப்பளிப்பானாகவும் பயன்படுகின்றது.

 ஒரு பரப்பின் மீதோ அல்லது இரண்டு வெவ்வேறு பொருள்களின் பரப்பின் மீதோ பூசி அவற்றை ஒட்டுவதற்கு பயன்படும் பொருளே ஒட்டும் பொருளாகும்.


இணையச்செயல்பாடு

வாழ்க்கைக்கான சத்துக்கள்

செயல்பாட்டின் மூலம் தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்க ளைப் பற்றி அறிவோமா!


படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி செயல்பாட்டின் பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2: இப்பொழுது குறிப்பு உதவி சாளரத்தின் இடது மேற்புரம் உள்ள ' x ' என்பதை சொடுக்கி நேரடியாக செயல்பாட்டினை தொடங்கலாம் அல்லது Next என்பதை சொடுக்கி வழிகாட்டும் குறிப்புகளை அறியலாம்.

படி 3: திரையில் ஒரு வயல், தாவரத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள் குறிக்கப்பட்ட நான்கு சிறு சதுரங்கள் மற்றும் நான்கு அளவிகள் ஆகியவற்றின் படங்கள் தரப்பட்டிருக்கும்.

படி 4: சுட்டியின் உதவியால் ஊட்டச்சத்துகள் குறிக்கப்பட்ட சதுரத்தினை இழுத்து வயலின் மீது பொருத்தவும். அளவியின் குறிமுள் பச்சை நிறத்தில் இருந்தால் தாவரங்கள் அனைத்து சத்துகளையும் சரியான அளவில் பெற்றிருக்கின்றன என்பதை அறியலாம்.


உரலி:

http://seedsurvivor.com/agrium-games/Feeding%20the%20Future/

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்