Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | செய்யுள் : அறநெறிச்சாரம்

முனைப்பாடியார் | பருவம் 3 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள் : அறநெறிச்சாரம் | 5th Tamil : Term 3 Chapter 3 : Manitham, allumai

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை

செய்யுள் : அறநெறிச்சாரம்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை : செய்யுள் : அறநெறிச்சாரம் - முனைப்பாடியார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

செய்யுள்

மனிதம்/ஆளுமை

 

கற்றல் நோக்கங்கள்

 குறித்துப் புரிந்துகொள்ளுதல்

 மனிதநேயச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுதல்

 உயிரிரக்கப் பண்பை மதித்துப் போற்றுதல்

 புதுவை வளர்த்த தமிழ் ஆளுமைகளை அறிந்துகொள்ளுதல்

 மரபுத்தொடர்களின் பொருள்களை அறிந்து பயன்படுத்துதல்

 

அறநெறிச்சாரம்

தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்

ஆய பொழுதாற்றும் ஆற்றலும்- காய்விடத்து

வேற்றுமை கொண்டுஆடா மெய்ம்மையும் இம்மூன்றும்

சாற்றுங்கால் சாலத் தலை

- முனைப்பாடியார்

 

சொல் பொருள்

காய்விடத்து - வெறுப்பவரிடத்து

சாற்றுங்கால் - கூறுமிடத்து

சால - மிகவும்

தலை - முதன்மை

பாடல் பொருள்

குற்றம் ஏற்படாமல் பேசுதல்துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல்தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை ஆகிய இவை மூன்றும் மிக உயர்ந்த பண்புகளாகும்.

நூல் குறிப்பு

அறநெறிக் கருத்துகளைக் கொண்டுவெண்பா வடிவில் இயற்றப்பெற்ற நூல்அறநெறிச்சாரம். இப்பாடல்கள் சுருங்கச் சொல்லல்விளங்க வைத்தல் முதலிய அழகுகளைப் பெற்று விளங்குகின்றன. இந்நூலை எழுதியவர்முனைப்பாடியார்.

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை