Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

இறையரசன் | இயல் 9 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 8th Tamil : Chapter 9 : Kuntraena nimirnduneel

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்

கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில் : கவிதைப்பேழை: உயிர்க்குணங்கள்: கேள்விகள் மற்றும் பதில்கள் - இறையரசன் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அடுத்தவர் வாழ்வைக் கண்டு …………… கொள்ளக்கூடாது.

அ) உவகை

ஆ) நிறை

இ) அழுக்காறு

ஈ) இன்பம்

[விடை : இ) அழுக்காறு]

 

2. நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று -----------

அ) பொச்சாப்பு

ஆ) துணிவு

இ) மானம்

ஈ) எளிமை

[விடை : அ) பொச்சாப்பு]

 

3. 'இன்பதுன்பம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

அ) இன்பம் + துன்பு

ஆ) இன்பம் + துன்பம்

இ) இன்ப + அன்பம்

ஈ) இன்ப + அன்பு

[விடை : ஆ) இன்பம் + துன்பம்]

 

4. குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

அ) குணங்கள் எல்லாம்

ஆ) குணமெல்லாம்

இ) குணங்களில்லாம்

ஈ) குணங்களெல்லாம்

[விடை : ஈ) குணங்களெல்லாம்]

 

பொருத்துக

1. நிறை பொறுமை

2. பொறை விருப்பம்

3. மதம் மேன்மை

4. மையல் கொள்கை

விடை

1. நிறை மேன்மை

2. பொறை பொறுமை

3. மதம் கொள்கை

4. மையல் விருப்பம்

 

குறுவினா

1. மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

விடை

மனிதரின் பொது இயல்புகள் :

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல்.

 

2. மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கண்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?

விடை

நற்பண்புகள் :

அறிவு, கருணை, அன்பு, இரக்கம், நாணம், மேன்மை , எளிமை, நினைவு, துணிவு, இன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், மானம், அறம், மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, இளமை, ஆராய்ந்து தெளிதல்.

 

 

சிறுவினா

மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?

விடை

மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன :

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை , பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை மனிதர்களிடம் உள்ள பண்புகளாகும்.

 

சிந்தனை வினா

மனிதர்கள் வளர்க்கவேண்டிய பண்புகளாகவும் விலக்கவேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?

விடை

வளர்க்கவேண்டிய பண்புகள்

அறிவு

கருணை

அன்பு

இரக்கம்

நாணம்

மேன்மை

எளிமை

நினைவு

துணிவு

இன்பம்

பொறுமை

கொள்கையைப் பின்பற்றுதல்

மானம்

அறம்

மகிழ்ச்சி

ஊக்கம்

விருப்பம்

வெற்றி

ஆராய்ந்து தெளிதல்

 

விலக்கவேண்டிய பண்புகள்

ஆசை

அச்சம்

சினம்

பொறாமை

துன்பம்

சோர்வு

வெறுப்பு

பகை

மறதி

 

கற்பவை கற்றபின்

 

 

பின்வரும் திருப்பாவைப் பாடலைப் படித்து மகிழ்க.

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செழுங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்;

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். பாடல்-14

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 9 : குன்றென நிமிர்ந்துநில்