வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள் | 8th Maths : Chapter 5 : Geometry
ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள்
ஒரு தளத்தில் இரு நேர்க்கோடுகள் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும்பொழுது, அவை வெட்டும் கோடுகள் என அழைக்கப்படுகிறது. இங்கு, கோடுகள் l1 மற்றும் l2 ஆகியவை O என்ற புள்ளியில் வெட்டிக் கொள்கின்றன. இங்கு புள்ளி O ஆனது l1 மற்றும் l2 ஆகியவற்றின் வெட்டுப்புள்ளி எனப்படும்.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்டக் கோடுகள் ஒருபுள்ளி வழியாகச் செல்கின்றன எனில், அவை ஒருபுள்ளி வழிச் செல்லும் கோடுகள் எனப்படும்.

படத்தில்
,
மற்றும்
ஆகியவை ஒருபுள்ளி வழிச்செல்லும் கோடுகள் மற்றும் O ஆனது ஒருங்கமைவுப் புள்ளியாகும்.