Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

அணு அமைப்பு | அலகு 12 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 12 : Atomic Structure

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : அணு அமைப்பு

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : அணு அமைப்பு : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

• ஒரு அணுவானது புரோட்டான், எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான் போன்ற அடிப்படைத் துகள்களால் ஆனது.

• மின்னிறக்கக் குழாய் என்பது வாயு நிரப்பப்பட்ட, இருபுறமும் மூடப்பட்ட ஒரு நீண்ட கண்ணாடிக் குழாயாகும். இது குரூக் குழாய் அல்லது கேதோடு கதிர் குழாய் என்றும் அழைக்கப்படுகிறது.

• வெவ்வேறு அணுக்கள் வெவ்வேறு இணையும் திறனைப் பெற்றுள்ளன. அணுக்களின் இணையக்கூடிய திறனே இணைதிறன் எனப்படும்.

• வேதியியல் வாய்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட வேதிச்சேர்மம் அல்லது மூலக்கூறில் இடம்பெற்றுள்ள அணுக்களின் வேதியியல் விகிதங்கள் பற்றிய தகவல்களைக் கூறுகின்ற ஒரு எளிய வழிமுறையாகும்

• லோகம் மற்றும் அலோகம் கலந்த சேர்மத்தின் பெயரினை எழுதும்போது உலோகத்தின் பெயரை முதலிலும், அலோகத்தின் பெயரை அடுத்ததாகவும் எழுத வேண்டும். அலோகத்தின் பெயருடன் ஐடு என்ற பின்னொட்டைச் சேர்த்து எழுத வேண்டும்.

• வேதிவினையினை சமன்செய்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில், சமன் செய்யப்பட்ட வினையின் மூலமே நிறை அழிவின்மை விதியை மெய்ப்பிக்க முடியும்.

• பொருண்மை அழியா விதிப்படி ஒரு வேதிவினை நிகழும்போது உருவாகும் வினைவிளைபொருளின் மொத்த நிறையானது வினைபடுபொருளின் மொத்த நிறைக்குச் சமம்.

 

சொல்லடைவு

கேதோடு எதிர்மின் முனை அல்லது எலக்ட்ரானை வழங்கும் முனை 

ஆனோடு நேர்மின் முனை அல்லது எலக்ட்ரானை ஏற்கும் முனை.

வேதிவாய்பாடு சேர்மத்தில் உள்ள தனிமங்களின் விகிதங்கள் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் வாய்பாடு.

மின்னிறக்கக் குழாய் வாயு நிரப்பப்பட்ட, இருபுறமும் மூடப்பட்ட நீண்ட கண்ணாடிக்குழாய். இதில் செலுத்தப்படும் மின்சாரத்தால் அயனியாக்கம் தூண்டப்படுகிறது.

அயனி ஒரு அணு எலக்ட்ரான்களை இழப்பதாலோ அல்லது ஏற்பதாலோ உருவாகக்கூடிய மின்சுமை பெற்றதுகள்.

மூலக்கூறு வாய்பாடு  சேர்மத்தின் ஒரு மூலக்கூறில் உள்ள தனிமங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கையைப் பற்றிக் குறிப்பிடும் வாய்பாடு.

வீழ்படிவு  அடியில் தங்கியிருக்கும் திடப்பொருள்.

வினைவிளைபொருள் வேதிவினையின் விளைவாக உருவாகக்கூடிய பொருள்.

வினைபடுபொருள் வேதிவினையில் ஈடுபட்டு மாற்றமடையக்கூடிய பொருள்.

இணைதிறன் தனிமங்களின் இணையக்கூடிய திறன். பொதுவாக ஹைட்ரஜனை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய திறன் அல்லது ஹைட்ரஜனுடன் இணையக்கூடிய திறன் எனவும் அழைக்கப்படுகிறது.



பிற நூல்கள்

1. Petrucci, Ralph H et.al. General Chemistry: Principles & Modern Applications (9th Edition). Upper Saddle River, NJ: Pearson Prentice Hall, 2007. Print.

2. P.L.Soni, Text book of Inorganic Chemistry, S. Chand publication, New Delhi

3. Complete Chemistry (IGCSE), Oxford university press, New York

4. Raymond Chang. (2010). Chemistry. New York, NY: The Tata McGraw Hill Companies. Inc. 5. Frank New Certificate Chemistry. McMillan Publishers

இணைய வளங்கள்

1. https://www.chem4kids.com

2. https://courses.lumenlearning.com/ boundless-chemistry/chapter/the-structure- of-the-atom/

3. https://www.khanacademy.org/science/ biology/chemistry--of-life/elements-and- atoms/e/atomic-structure


 

இணையச் செயல்பாடு

அணு அமைப்பு

இச்செயல்பாடுகள் மூலம் அணு அமைப்பை அறியலாம்.

படி 1 கீழ்க்காணும் உரலி / விரைவுக்குறியைப் பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி 2 திரையில் புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் விளையாட்டு தோன்றும்.

படி 3 கீழ்நோக்கி நகர்த்தினால் விளையாட்டுகள் தோன்றும். அதனைச் சொடுக்கவும். வினாடிவினாவை விளையாடி மகிழவும்.

படி 4 மீண்டும் அடுத்த விளையாட்டுகளை விளையாட இச்செயலினைத் தொடரவும்.

உரலி: https://www.wartgames.com/themes/science/atomicstructure.html

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 12 : அணு அமைப்பு