Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | நினைவில் கொள்க

விசையும் இயக்கமும் | முதல் பருவம் அலகு 2 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 7th Science : Term 1 Unit 2 : Force and Motion

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : விசையும் இயக்கமும்

நினைவில் கொள்க

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 :விசையும் இயக்கமும் : நினைவில் கொள்க

நினைவில் கொள்க

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருள் கடந்து வந்த மொத்தப் பாதை தொலைவு எனப்படும்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடையே உள்ள மிகக்குறைந்த நேர்க்கோட்டுப் பாதை இடப்பெயர்ச்சி எனப்படும். 

இடப்பெயர்ச்சி மாறும் வீதம் திசைவேகம் எனப்படும். திசைவேகத்தின் SI அலகு மீட்டர் / விநாடி (மீ/வி) ஆகும். 

திசைவேகம் மாறும் வீதம் முடுக்கம் எனப்படும். முடுக்கத்தின் SI அலகு மீ/வி2

எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவதுபோல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.

ஒழுங்கான வடிவம் கொண்ட பொருள்களின் ஈர்ப்பு மையமானது பொதுவாக அதன் வடிவியல் மையத்தில் அமைகிறது.

ஒரு பொருளின் ஆரம்ப நிலையினைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனே அப்பொருளின் சமநிலை எனப்படும்,

சமநிலை மூன்று வகைப்படும். அவை: உறுதிச்சமநிலை, உறுதியற்ற சமநிலை மற்றும் நடுநிலைச் சமநிலை

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : விசையும் இயக்கமும்